Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஹர்திக் பாண்டியா உடன் ராஷ்மிகா மந்தனா திருமணமா? போட்டோவால் ஆடி போன ரசிகர்கள்.. உண்மை என்ன?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கை அண்மையில் இருளால் நிறைந்தது. ஹர்திக் பாண்டியா இந்தியாவின் அடுத்த கேப்டனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்தப் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் அவருடைய மனைவி நட்டாஷாவுடன் விவாகரத்தும் ஏற்பட்டது. இதை அடுத்து இருவரும் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடும் போட்டியை பிரிட்டன் பாடகர் ஜாஸ்மின் வாலியா நேரில் கண்டு களித்தார்.

Hardik Rashmika

அப்போது இருவரும் டேட்டிங் செய்து கொண்டு இருந்ததாக செய்திகள் வெளியானது. இதே வேளையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டாவுடன் காதல் உறவில் இருப்பதாக செய்திகள் வெளியானது. தமிழில் வாரிசு புஷ்பா மற்றும் அனிமல் போன்ற திரைப்படங்களில் நடித்து இந்தியாவின் நம்பர் ஒன் ஹீரோயின் ஆக ராஷ்மிகா மந்தனா விளங்குகிறார்.

இந்த நிலையில் திடீரென்று சமூக வலைத்தளத்தில் ராஷ்மிகா மந்தானாவும் ஹர்திக் பாண்டியாவும் மாலை மாட்டிக் கொண்டு நெற்றியில் குங்கும பொட்டுடன் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதனால் ஒரு சிலர் இருவரும் காதலித்து டேட்டிங் செய்வதாகவும், இன்னொரு சிலர் ரகசியமாகவே திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் பரப்பினர்.

இந்த நிலையில் இது குறித்து நமது ஒன் இந்தியா தளம் சோதனையில் ஈடுபட்டது. அப்போது இந்த புகைப்படம் ஏஐ ஆப் மூலம் உருவாக்கப்பட்ட போலி இமேஜ் என்பது தெரிய வந்தது. ஆனால் இந்த புகைப்படத்தை உண்மை என நம்பி பலரும் அதனை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். ஏற்கனவே ராஷ்மிகாவை அபாசமாக சித்தரித்து பல ஏஐ வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து இருக்கிறது. இதனால் சமூக வலைத்தளத்தில் வரும் அனைத்து செய்திகளும் உண்மை அல்ல என்றும் இது உண்மையா இல்லையா என விளையாட்டுத்துறை சம்பந்தமாக எந்த செய்தியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் நமது மைக்கேல் தமிழ் இணையதளத்துடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்.

Story first published: Friday, April 25, 2025, 11:46 [IST]
Other articles published on Apr 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+