Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நாங்கள் யாரையும் குறை சொல்ல மாட்டோம்.." டி20யில் இவர் தான் நம்பர் 1 வீரர்.. KKR வருண் சக்கரவர்த்தி

கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இந்திய டி20 அணியின் நம்பர் ஒன் பவுலரான வருண் சக்கரவர்த்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் ஏமாற்றம் இருந்தது. எனினும் தற்போது வருண் சக்கரவர்த்தி தன்னுடைய மேஜிக் பந்துவீச்சை மீண்டும் வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறார்.

சன்ரைசர்ஸ் அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை வருண் சக்கரவத்தை வீழ்த்தியதன் மூலம் அந்த அணி 120 ரன்களில் சிறந்தது. எனினும் வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் இருந்து வழங்கப்படவில்லை. இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் எங்கள் அணியின் இளம் வீரர் ஆங்கிரிஸ் அபாரமான ஒரு இன்னிங்சை விளையாடினார்.

Varun chakravarthy

வெங்கடேஷ் ஐயர் கடைசி வரை களத்தில் நின்று அபாரமான ஒரு இன்னிங்ஸை ஆடினார். இதைப் போன்று ரிங்கு சிங்கும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் என்பது சராசரியான ஸ்கோர் தான் என்று நாங்கள் நினைத்தோம். எனினும் இந்த இலக்கை தற்காத்துக் கொள்ள முடியும் என்று நம்பினோம். எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் நல்ல தொடக்கத்தை பெற்றார்கள்.

குறிப்பாக வைபவ் வீழ்த்திய விக்கெட் மிகவும் முக்கியமானது. எங்களை முதல் முறையாக ரகானே தலைமை தாங்கி வழி நடத்துகிறார். அவருடைய கேப்டன்சி இன்று சிறப்பாக இருந்தது. நாங்கள் மற்ற பவுலர்களை எல்லாம் பயன்படுத்தவில்லை. ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல நினைத்தோம். இறுதியில் எப்போதுமே எங்களுக்கு ரஸில் தான் இறுதிக்கட்டத்தில் பந்து வீசுவார்.

என்னை பொறுத்தவரை ஹென்றிச் கிளாசன் தான் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் அவர் களத்தில் இருக்கும்போது நம்மால் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எங்களுக்கு கடந்த இரண்டு போட்டிகள் மிகவும் கடினமாக இருந்தது. மும்பை அணிக்கு எதிராக நாங்கள் அடைந்த தோல்வி மிகவும் பெரியது. எனினும் கடந்த ஆண்டும் இதே போன்ற தோல்விகளை நாங்கள் பெற்றோம். எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்க விரும்புகின்றோம்.

நாங்கள் ஒருவரை ஒருவர் பழி சுமத்தி கொள்ள விரும்ப மாட்டோம். களத்தை பற்றி தெரிந்து கொள்ள கொஞ்சம் நேரம் செலவழித்து அதன் பிறகு கடைசி ஐந்து ஓவர்களில் ரன்களை குவிக்க வேண்டும். கடைசி ஐந்து ஓவரில் 70, 80 ரன்கள் எடுத்தால் இலக்கு மிகப்பெரியதாக மாறிவிடும். இன்றைய ஆட்டத்தில் நான் நன்றாக பந்து வீசினாலும் அது இன்றைய ஆட்டத்துடன் முடிந்துவிடும். அடுத்த போட்டியில் நான் ஆரம்பத்தில் இருந்து தான் செயல்பட வேண்டும். ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தங்களை செட்டில் செய்து கொள்ள முயற்சி செய்வோம். அதன் பிறகு தான் வெற்றியை கட்டமைக்கும் என்று வருண் சக்கரவர்த்தி கூறினார்.

Story first published: Friday, April 4, 2025, 7:30 [IST]
Other articles published on Apr 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+