பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர் சி பி அணி நடப்பு சீசனில் முதல் தோல்வியை தழுவியது. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசியது.
20 ஓவர் ஆர் சி பி அணி 169 ரன்கள் எடுக்க குஜராத் அணி இந்த இலக்கை 13 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ஜாஸ் பட்லர், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 73 ரன்கள் அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும்.

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜாஸ் பட்லர், இன்றைய ஆட்டத்தை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன். எங்களுடைய பவுலர்கள் இன்று சிறப்பான ஆட்டத்தை ஆடினார்கள். நான் மட்டும் பில்டிங்கில் சிறப்பாக செய்து இருந்தால் நாங்கள் இன்னும் குறைவான இலக்கையே ஷேஸ் செய்திருப்போம்.
இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. சால்ட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நான் எப்படி விட்டேன் என்று எனக்கு தெரியவில்லை. இதை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன். சால்ட் ஒரு அபாயகரமான வீரர். அவர் அடித்த பந்து என் நெஞ்சுக்கு நேராக வந்தது. அதை நான் பிடிக்காமல் விட்டு விட்டேன்.
இந்த கேட்ச் மிஸ் ஆனதற்கு பிறகு நான் இன்றைய ஆட்டத்தில் ரன்கள் அடித்து கேட்ச் மிஸ் ஆனதை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஒரு அணியாக நாங்கள் சரியாக பில்டிங் செய்யவில்லை. எங்களுடைய பில்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. ஆடுகளத்திலும் பந்துவீச்சுக்கு சாதகமாக சில விஷயம் இருந்தது.
எனவே எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்கள். இதன் மூலம் எங்களுக்கு சேஸிங் ஏதுவாக இருந்தது. நாங்களும் கொஞ்சம் சுதந்திரமாக விளையாடி ரன்களை சேர்த்தோம். நான் கடந்த சில மாதங்களாகவே என்னுடைய கிரிக்கெட்டை ரசிக்கும் வகையில் அமைத்துக் கொள்ளவில்லை.
ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய சிறந்த செயல்பாடு வெளிப்படுத்த நினைக்கின்றேன். ஆனால் இன்றைய ஆட்டம் அது நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியில் பல விஷயங்களில் நாங்கள் சரியாக கவர் செய்து இருக்கிறோம். வேகப்பந்துவீச்சு, சுழற் பந்துவீச்சாளர்கள் பேட்டிங் வரிசை என அனைத்தும் நன்றாக இருக்கிறது என்று ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.