Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஒரே ஓவரில் 30 ரன்கள்.. அதிவேக சதம் அடித்த இந்திய வீரர்.. கெயில் பட்டியலில் வைபவ்-க்கு இடம்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இன்றைய நாள் வரலாற்றில் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டியில் பார்த்தவர்கள் எல்லாம் ஒரு மகத்தான உலக சாதனையில் இடம் பிடித்திருக்கிறார்கள். எப்படி சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய இளம் வயதில் இங்கிலாந்து ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினாரோ?

எப்படி ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னே வரலாற்றின் சிறந்த பந்தை வீசினாரோ, அதேபோல் 14 வயது வீரரான சூரியவன்சி ஒரு புதிய வரலாற்றை படைத்திருக்கிறார். இன்னும் பல உலக சாதனைகளை உருவாக்கப் போகிற ஒரு சிறுவன் தான் எப்படி விளையாட போகிறேன் என்பதை இன்று ஒட்டுமொத்த உலகத்திற்கும் காட்டினார்.

Vaibhav Suryavanshi

210 ரன்கள் என்ற இலக்கை துரத்த முயன்ற போது 14 வயது வீரரான சூர்யவன்ஷி அதிரடியை காட்டினார் இசாந்த் சர்மா, முஹமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் அடங்கிய பந்துவீச்சை ஏதோ சிறுவர்களின் பந்துவீச்சு போல் மைதானத்தின் அனைத்து பக்கமும் சிதறடித்தார் வைபவ் சூரியவன்ஷி, இந்த நிலையில் 17 பந்துகளில் அரை சதம் அடித்தபோது கேட்ச் ஆகி ஆட்டமிழந்து விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் தொடர்ந்து அதிரடி காட்டினார். குறிப்பாக ஆட்டத்தின் பத்தாவது ஓவரை ஆப்கானிஸ்தான் வீரர் கரீம் ஜன்னத் வீசினார். இந்த ஓவரை சூரியவன்சி தான் எதிர்கொண்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் பந்து சிக்ஸருக்கும் ,இரண்டாவது பந்து பௌண்டரிக்கும், மூன்றாவது பந்து சிக்ஸருக்கும் அடித்தார். தொடர்ந்து நான்காவது பந்தை பவுண்டரிக்கும், ஐந்தாவது பந்தை பௌண்டரிக்கும், ஆறாவது பந்து சிக்ஸருக்கும் சூரியவன்சி அடித்தார்.

ஒரே ஓவரில் மூன்று சிக்சர், 3 பவுண்டரி என மொத்தம் 30 ரன்கள் அடித்தார். இதன் மூலம் வைபவ் சூர்யவன்சி 10 புள்ளி இரண்டாவது ஓவரில் எல்லாம் 35 பந்துகளில் சதம் கடந்தார். இதனை அடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.இதற்கு முன்பு யூசுப் பதான், 37 பந்துகளில் சதம் அடித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது வைபவ் 35 பந்துகளில் எல்லாம் சதத்தை அடித்து முறியடித்து இருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த சாதனை கிறிஸ் கெயில் 30 பந்துகளில் அடித்து இருப்பது சாதனையாக தொடர்கிறது. தற்போது வைபவ் சூரியன்சி இரண்டாவது இடத்தை அடித்துள்ளார்.

Story first published: Monday, April 28, 2025, 23:08 [IST]
Other articles published on Apr 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+