Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஒட்டுமொத்த குஜராத் அணியின் கதையை முடித்த 14 வயது வீரர் வைபவ்..15.5 ஓவரில் ராஜஸ்தான் அபாரம்

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வாழ்வா? சாவா என்ற கட்டத்தில் ராஜஸ்தான் அணி குஜராத் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன், கில் ஆகியோர் களம் இறங்கினர். சாய் சுதர்சனிடம் இருந்த ஆரஞ்சு நிறத் தொப்பியை சூரியகுமார் மற்றும் விராட் கோலி ஆகியோர் கைப்பற்றிய நிலையில் தற்போது மீண்டும் சாய் சுதர்சன் இன்றைய ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்து ஆரஞ்சு நிற தொப்பியை தன் வசப்படுத்தினார்.

RR vs GT

மறுபுறம் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க 29 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10 புள்ளி இரண்டு ஓவரில் 93 ரன்கள் சேர்த்தது. கில் அதிரடியாக தொடர்ந்து ஆட ஜாஸ் பட்லர் அவருக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். கில் 50 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார்.

இதில் 5 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று வாஷிங்டன் சுந்தர் 8 பந்துகளில் 13 ரன்கள் சேர்க்க ராகுல் திவாட்டியா நான்கு பந்துகளில் ஒன்பது ரன்களும், ஷாருக்கான் இரண்டு பந்துகளில் ஐந்து ரன்களும் எடுத்தார். கடைசி வரை அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர் 26 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதில் மூன்று பவுண்டரி, நான்கு சிக்சர் அடங்கும்.

இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 192 ஆகும். இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் பந்துவீச்சு தரப்பில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில் ராஜஸ்தான் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இதில் ரஷீத் கான் தற்காலிக கேப்டனாக செயல்பட்டார்.

இதனை அடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணியின் இளம்படை விளையாடியது.

இதில் 14 வயது வீரரான சூரியவன்ஷி நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வாலும் இணைந்து குஜராத் அணியின் பந்துவீச்சை சுக்குநூறாக உடைத்தனர். குறிப்பாக 14 வயது வீரரான சூரியவன்சி தன்னுடைய ருத்ரதாண்டவத்தை இன்று ஆடினார். ஐபிஎல் தொடரில் எப்படி 14 வயது இடம் பிடித்தார் என்ற கேள்விக்கு தன்னுடைய பேட்டிங் மூலம் இன்று நிரூபித்தார். ஏதோ 20 ரன்கள் 30 ரன்கள் வேகமாக அடித்து சொல்லும் வீரர் தாம் கிடையாது என்பதை வைபவம் சூரியவன்ஷி தன்னுடைய 14 வயதிலே நிரூபித்திருக்கிறார்.

அதுவும் முஹம்மது சிராஜ், இஷாந்த் ஷர்மா, பிரசித் கிருஷ்ணா, ரசீத்கான், வாஷிங்டன் சுந்தர் போன்ற சர்வதேச பந்துவீச்சு படையைக் கொண்ட குஜராத் பவுலர்களை சூரியவன்சி பதம் பார்த்தார். தொடர்ந்து அவர் சிக்ஸர், பவுண்டரி என அடிக்க குஜராத் அணி செய்வது அறியாமல் திகைத்துப் போய் நின்றார்கள். இதில் சூரியவன்சி 17 பந்துகளில் அரை சதம் விளாசி சாதனை படைத்தார்.

இதில் மூன்று பவுண்டரிகளும், ஆறு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் டி20 கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அரை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை சூரியவன்சி படைத்திருக்கிறார். மேலும் அதிவேகமாக ஐபிஎல் தொடரில் அரை சதம் விளாசிய 14 வது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் ஜெய்ஸ்வால் கடந்த 2023 ஆம் ஆண்டு அரை சதம் அடித்தது தற்போது வரை சாதனையாக தொடர்கிறது. 14 வயதில் ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகத்தையும் வைபவ் சூர்யவன்சி தன்னுடைய அதிரடி பேட்டிங் மூலம் கலக்கி இருக்கிறார்.

தொடர்ந்து ஆக்கோரஷமாக ஆடிய அவர், ஒவேரில் 30 ரன்கள் அடித்தார். இதன் மூலம் 35 பந்துகளில் சதம் விளாசினார். ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 2வது அதிவேக சதம் இதுவாகும். டி20 வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இறுதியில் 38 பந்தில் 101 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரியும், 11 சிக்சர்கள் அடங்கும்.

இறுதியில் ரியான் பராக் 15 பந்தில் 32 ரன்கள் எடுக்க,ஜெய்ஸ்வால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 15.5 ஓவரில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் ராஜஸ்தான் 3வது வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியது.

Story first published: Monday, April 28, 2025, 23:24 [IST]
Other articles published on Apr 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+