Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: தோனி காலில் விழுந்த 14 வயது சிறுவன் வைபவ்.. கொஞ்சமும் எதிர்பார்க்காத "தல"

டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னைக்கு எதிராக தோல்வியை தழுவியது. இதன் மூலம் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 10வது தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களம் இறங்கிய சிஎஸ்கே அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 20 பந்துகளில் 43 ரன்களும் பிரவீஸ் 25 பந்துகளின் 42 ரன்களும் எடுத்தனர்.

Vaibhav Suryavanshi

இதனை அடுத்து ராஜஸ்தான் அணி 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 36 ரன்கள் எடுக்க 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி அபாரமாக விளையாடி 33 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரி,நான்கு சிக்ஸர் அடங்கும். 172 என்ற ஸ்டிரைக் ரைட்டை வைத்திருந்தார்.

தோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த நிலையில் அவரையே ஆச்சரியப்படுத்தும் வகையில் வைபவ்தன்னுடைய இன்னிங்சை விளையாடினார். இதன் காரணமாக ராஜஸ்தான் 17 புள்ளிகள் எல்லாம் வெற்றியை பெற்றது. இந்த தருணத்தில் போட்டி முடிவடைந்த உடன் இதனை வீரர்களும் ஒருவருக்கொருவர் கைக்கூலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது திடீரென்று தோனியை பார்த்தவுடன் வைபவ் சூரியவன்சி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத தோனி அவருக்கு வாழ்த்துக்களை கூறினார். ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பு அது பீகாரில் தான் இருந்தது. இதேபோன்று சூரியவன்சியும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.

தோனி பீகார் மாநிலத்தில் இருந்து வந்த பிறகுதான் அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் பலர் மீது வெளிச்சம் பட்டது. இந்திய அணியின் பிதாமகன் கேப்டன் என்பதையும் தாண்டி நம்ம ஊரு காரர் என்ற தனி மரியாதையுடன் வைபவ் நேற்று தோனியிடம் ஆசீர்வாதம் வாங்கினார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

Story first published: Wednesday, May 21, 2025, 11:16 [IST]
Other articles published on May 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+