IPL 2025: மும்பை பந்துவீச்சை நொறுக்கிய கோலி,ரஜத்.. பும்ராவின் மாஸ் கம்பேக்..ஆர்சிபிக்கு இமாலய இலக்கு
மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 222 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய rcb அணியின் தொடக்க வீரர்களான பில் சால்ட் ஆட்டத்தில் இரண்டாவது பந்திலே ஆட்டம் இழந்தார். இதனால் விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகியோருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எனினும் இதனை அபாரமாக சமாளித்த விராட் கோலி தனது வழக்கமான அதிரடியை காட்டினார்.

எட்டு பவுண்டரி, 2 சிக்சர் என 42 பந்துகளில் கோலி 67 ரன்கள் எடுத்தார். படிக்கல் 22 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரிகள் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிவிங்ஸ்டோன் டக்அவுட் ஆக ஆர்சிபி அணி மீண்டும் சரிவை நோக்கி சென்றது. முக்கியமான கட்டத்தில் மூன்று முக்கிய வீரர்களும் வெளியேறினர்.
இந்த சூழலில் தனியாளாக விளையாடிய கேப்டன் பட்டிதார் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தார். நான்கு சிக்சர், ஐந்து பவுண்டரி என பட்டையை கிளப்பிய அவர் 32 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று ஜித்தேஷ் சர்மாவும் 19 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்ஸர், 2 பவுண்டரி அடங்கும்.
இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா, 4 ஓவர்களில் விக்கெட் ஏதும் இன்றி 29 ரன்கள் விட்டுக் கொடுத்தார். எனினும் நான்கு ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 57 ரன்கள் விட்டுக் கொடுத்தார். கடைசி ஐந்து ஓவரில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 70 ரன்களை எடுத்தது.
ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் பந்தின் வேகத்தை குறைத்து வீசினால் அதனை சிக்ஸர் அடிக்க சிரமமாக பேட்ஸ்மேன்களுக்கு இருக்கிறது. இதனால் 222 ரன்கள் என்று இலக்கு மும்பைக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications