Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீ எல்லாம் விராட் கோலியை பற்றி பேசலாமா? உன் ஸ்ட்ரைக் ரேட் என்ன? கோலியின் அண்ணன் சஞ்சய்க்கு பதிலடி

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி விராட் கோலி அபாரமாக விளையாடி வருகிறார். இதுவரை நடப்பு சீசனில் 10 போட்டியில் விளையாடியுள்ள விராட் கோலி ஆறு அரை சதம் அடித்திருக்கிறார்.

மொத்தமாக 443 ரன்கள் அடித்துள்ளார். இதில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 138 என்ற அளவில் இருக்கிறது. இந்த சூழலில் விராட் கோலியின் ஸ்டரைக் ரேட் டி20 கிரிக்கெட் ஏற்ற வகையில் இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேரக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

Virat Kohli

ஒவ்வொரு வாரமும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வரும் டாப் 10 வீரர்களை சஞ்சய் மஞ்சுரேக்கர் தேர்வு செய்து வருகிறார். இதில் அவர் தொடர்ந்து விராட் கோலியை புறக்கணித்து வருகிறார். மேலும் விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு இடையிலான போட்டி இனி சிறந்தவர்கள் மற்றும் சிறந்தவர்களுக்கு இடையிலான போட்டி கிடையாது என்று கூறி இருந்தார்.

மேலும் விராட் கோலி தன்னுடைய உச்சகட்ட கிரிக்கெட் செயல்பாட்டை தாண்டி வந்துவிட்டதாகவும் குறை கூறி உள்ளார். இந்த நிலையில் விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி, சஞ்சய் மஞ்சுரேக்கருக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சஞ்சய் மஞ்சுரேக்கர் மொத்தமாகவே ஒரு நாள் கிரிக்கெட்டில் 64 என்ற அளவில் தான் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.

ஆனால் அவர் 200க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பது பற்றி சுலபமாக பேசி வருகிறார் என்று கூறியிருக்கிறார். விகாஸ் கோலியின் இந்த பதிலை பலரும் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். தனது ஸ்ட்ரைக் ரேட் தொடர்பாக எழுந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள விராட் கோலி கள சூழல் என்பது மிகவும் முக்கியம்.

அதற்கு ஏற்ற வகையில் பார்ட்னர்ஷிப் அமைப்பது என்பது மிகவும் முக்கியம். ஆனால் இதைப் பற்றி அனைவரும் மறந்து விட்டு வெறும் ஸ்ட்ரைக் ரேட் பற்றிய பேசி வருகிறார்கள் என்று விராட் கோலி பதிலடி தந்திருந்தார். எனினும் மாறிவரும் t20 கிரிக்கெட்டில் 150க்கு மேல் ஸ்டிரைக் ரேட் வைத்திருந்தால் தான் அது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறுகிறது என்பது நிதர்சனம்.

Story first published: Wednesday, April 30, 2025, 11:48 [IST]
Other articles published on Apr 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+