Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: கோலியை போய் தப்பா நினைச்சிட்டீங்களே? முஷிர் கானுக்கு பேட்டை பரிசாக தந்த கிங் கோலி

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி தகுதி பெற்றிருக்கிறது. இந்த சூழலில் ஆர் சி பி அணி குவாலிஃபயர் முதல் சுற்றில் பஞ்சாப் அணியை 101 ரன்கள் சுருட்டி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பத்து ஓவர்கள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது அறிமுக வீரராக களமிறங்கிய முசிர் கானை விராட் கோலி தண்ணீர் கொண்டு வந்த பையன் என்று கிண்டல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆர்சிபி வீரர்கள் அபாரமாக பந்து வீச பஞ்சாப் பேட்டர்ஸ், தங்களது விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.

Virat kohli Musheer Khan

இதனால் முஷீர் கானை இம்பேக்ட் வீரராக பஞ்சாப் அணி களம் இறக்கியது. இதை பார்த்து விராட் கோலி இப்போதான் இந்த பையன் தண்ணி கொடுக்க வந்தான் என்று சொல்லி கிண்டல் அடித்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் விராட் கோலியை பலரும் கடுமையாக திட்டி வருகின்றனர். இந்த தருணத்தில் தான் ஒரு உண்மை வெளிவந்தது.

முசிர் கானை அழைத்து விராட் கோலி தன்னுடைய பேட்டை பரிசாக வழங்கியிருக்கிறார். விராட் கோலி கொடுத்த பேட்டௌ முசிர் கான் மிகப்பெரிய கௌரவமாக நினைத்து அதனை பஞ்சாப் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு எடுத்து வந்திருக்கிறார். அப்போது வீரர்களிடம் இந்த பேட்டை விராட் கோலி தமக்கு வழங்கி இருக்கிறார் என்று கூறி அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சர்பராஸ் கானின் தம்பி என்பதை தான் கோலி சக வீரர்களிடம் கூறியிருக்கிறார் என்றும் ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என ஆர் சி பி ரசிகர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் சர்பிராஸ் தம்பியை ஊக்கப்படுத்தும் விதமாகத்தான் விராட் கோலி தன்னுடைய பேட்டை பரிசாக வழங்கியிருக்கிறார்.

ஆனால் அதை தெரியாமல் விராட் கோலியை ரசிகர்கள் தவறாக பேசுவது வருத்தம் அளிப்பது ஆகவும் ஆர் சி பி தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றன. எனினும் இதையும் விமர்சிக்கும் ஒரு தரப்பு ரசிகர்கள், தண்ணீர் பாய் என்று விராட் கோலி கிண்டல் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால் அதனை சமாளிக்கும் விதமாக கோலி தனது பேட்டை வழங்கி டிராமா செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Friday, May 30, 2025, 12:23 [IST]
Other articles published on May 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+