Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 Finals: நீ ஜெய்ச்சிட்ட மாறா! முத்தமிட்ட மனைவி அனுஷ்கா.. கட்டி அணைத்து அழுத விராட் கோலி

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள விராட் கோலி ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியைப் பெற்றவுடன் விராட் கோலி மைதானத்திலே முட்டி போட்டு அழுதார்.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இதை அடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய பஞ்சாப் அணிகள் அதிகபட்சமாக 30 பந்துகளின் 62 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களின் ஆட்டம் இழந்தார்.

Virat kohli Anushka

இதனால் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து விராட் கோலி மைதானத்தில் அழுதார். ஒவ்வொரு வீரர்களும் விராட் கோலியை கட்டி அணைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆர்சிபி அணியின் இறுதிப்போட்டியை பார்ப்பதற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து அகமதாபாத்திற்கு வந்த டிவில்லியர்ஸ் விராட் கோலியை கட்டி அணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது விராட் கோலி நீங்களும் எங்களுடன் கோப்பையை வெல்ல வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

ஒவ்வொரு வீரரும் விராட் கோலியை கட்டி அணைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எதிரணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் விராட் கோலியை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். இதனை அடுத்து மனைவி அனுஷ்கா சர்மா மைதானத்திற்குள் வந்து விராட் கோலியை கட்டி அணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும் விராட் கோலியின் நெற்றியில் முத்தமிட்டார். விராட் கோலி அனுஷ்கா சர்மாவுக்கு முத்தம் கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர். 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஆர்சிபி அணி கோர்ப்பது என்று ரசிகர்களின் தவத்தை நிறைவேற்றி இருக்கிறது.

Story first published: Tuesday, June 3, 2025, 23:53 [IST]
Other articles published on Jun 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+