Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 -விராட் கோலியின் பவரை குறைத்த ஆர்சிபி.. ஒட்டுமொத்த அணியின் முகமே மாறுகிறது.. அதிரடி திட்டம்

பெங்களூரு : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் இறுதியில் தொடங்குகிறது. இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் மெகா ஏலம் மூலம் ஒட்டுமொத்த அணியின் முகங்களே மாற இருக்கிறது.

யாருமே கனவில் நினைக்காத வீரர்கள் எல்லாம் தங்களுடைய அணியிலிருந்து வேறு அணிக்கு மாற இருக்கிறார்கள். மேலும் மெகா ஏலத்திற்கு முன்பு சில வீரர்களை மட்டும் தான் தக்க வைக்க முடியும். இதனால் பல வீரர்கள் மெகா ஏலம் மூலம் அணி நிச்சயம் மாற வாய்ப்பு இருக்கிறது.

IPL 2025 virat kohli RCB

இந்த நிலையில் மெகா ஏலத்திற்கு முன்பே வீரர்களை டிரான்ஸ்பர் செய்யும் வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு ஆர் சி பி அணி ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு சில வீரர்களை மாற்றிவிட முடிவெடுத்திருக்கிறது. அதன்படி ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து ஆர் சி பி அணி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை.

இதனால் விராட் கோலி பதவியில் இருந்து சென்ற பிறகும் டுபிளசிஸ் தலைமையில் கூட ஆர்சிபி அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த நிலையில் டுபிளசிஸ்க்கு வயதாகி விட்டதால் அவர் அடுத்த சீசன் விளையாடுவாரா என தெரியவில்லை.எனினும் டுபிளசிஸ் நல்ல பார்மில் இருந்தாலும் அணியின் எதிர்கால திட்டமாக இளம் வீரர்கள் கையில் அணியை ஒப்படைக்க ஆர் சி பி அணி முடிவு எடுத்திருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக லக்னோ அணியிலிருந்து கே எல் ராகுலை ஆர்சிபிக்கு கொண்டுவர திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஜாஸ் பட்லர், அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்களையும் ஆர் சி பி க்கு கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஆர் சி பி அணியின் கேப்டனாக விராட் கோலி இல்லை என்றாலும் மற்ற முடிவுகளை எடுக்கும் முக்கிய பொறுப்பில் தான் கோலி இன்னும் இருக்கின்றார்.

ஆர் சி பி அணியின் அறிவிக்கப்படாத தலைமை குழுவாக விராட் கோலி செயல்படுகிறார். இந்த நிலையில் விராட் கோலியின் பவரை rcb குறைக்க முடிவு எடுத்துள்ளது. அதன்படி ராகுல், பட்லர் ஆகியோர் ஆர் சி பி அணியில் முக்கிய முடிவுகளை எடுக்க அனுமதி அளிக்கப்படும். டி20 உலக கோப்பையில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளதால் இன்னும் இரண்டு அல்லது மூன்று சீசன்கள் தான் ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விராட் கோலி இல்லாமலேயே rcb அணி விளையாட பழக வேண்டும் என்று அணி நிர்வாகம் இவ்வாறு காய் நகர்த்திருப்பதாக ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Wednesday, July 24, 2024, 6:31 [IST]
Other articles published on Jul 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+