Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: சேப்பாக்கம் சம்பவம் தெரியும்ல.. இனி அப்படி தான்.. விராட் கோலி கருத்து

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர் சி பி அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி அரை சதம் விளாசினார். 42 பந்துகளை எதிர்கொண்ட அவர் 68 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு சிக்ஸரும் எட்டு பவுண்டர்களும் அடங்கும். ஆர்சிபி அணி ஆட்டத்தின் இரண்டாவது பந்தலில் விக்கெட்டை பறி கொடுக்க விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி, இன்றைய இன்னிங்ஸில் நாங்கள் அபாரமாக விளையாடினோம். குறிப்பாக ஆட்டத்தில் இரண்டாவது பந்திலே நாங்கள் விக்கெட்டை பறி கொடுத்து விட்டோம்.அதையும் தாண்டி நாங்கள் சிறப்பான முறையில் விளையாடிய ரன்களை சேர்த்திருக்கிறோம். படிக்கல் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார். அவருடைய அதிரடி ஆட்டம் போட்டியை எங்களுக்கு சாதகமாக மாற்றி இருக்கிறது.

Virat Kohli

நானும் இன்று நன்றாக விளையாடினேன். எங்கள் இருவருக்கும் இடையிலான பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமாக இன்றைய இன்னிங்ஸ்க்கு மாறியிருக்கிறது. நான் எப்போதுமே பந்தை ஆரம்பத்திலே தொட முயற்சி செய்வேன். அதுதான் என்னுடைய பலம். பந்தை நன்றாக அடித்து விட்டால் அதன் பின் என்னால் நான் விரும்பும் ஷாட்களை ஆட முடியும். இன்றைய ஆட்டத்தில் கொஞ்சம் புதுவிதமான சாட்டை ஆட முயற்சி செய்தேன்.

ஏனென்றால் டி20 கிரிக்கெட் மாறி வருகிறது. சூழலுக்கு ஏற்ப நாமும் நமது பேட்டிங்கை மாற்றிக் கொள்ள வேண்டும். நான் ஆரம்ப கட்டத்தில் பாலை சரியாக டைமிங் செய்தால் அன்று அணிக்காக நான் நல்ல ஸ்கோரை அடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில் பில் சால்ட் ஆட்டம் இழந்தவுடன் எங்கள் இருவரில் யாராலும் ஒருவர் அதிரடி காட்ட வேண்டிய நிலையில் இருந்தோம்.

படிக்கல் தற்போது இரண்டு மூன்று போட்டிகளாக அதை செய்து வருகிறார். இனிவரும் போட்டிகளில் அவர் பெரிய ஸ்கோர் நிச்சயம் அவருக்கு கிடைக்கும். நாங்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் மூலம் போட்டியை கடைசி வரை கொண்டு சென்றோம். இறுதியில் ஜித்தேஷ் , ரஜத் ஆகியோர் அதிரடி காட்டினார்கள். ரஜத் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டி விட்டார். ஜித்தேஷ, ரஜத் அபாரமாக விளையாடி எங்களுக்கு கூடுதலாக 20 ,25 ரகளை பெற்றுக் கொடுத்து விட்டார்கள்.

இன்றைய ஆட்டத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு சுழற் பந்துவீச்சாளரை பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் அவர் பந்து வீசுவது என்பது கடினம். இதன் மூலம் கூடுதலாக நாங்கள் 20, 25 ரப்களை பெற்றிருக்கின்றோம். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் விழ வில்லை என்றால் அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். மேலும் பவுண்டரி எல்லையும் குறைவு என்பதால் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்துவீச்சாளர்களை குறிவைத்து தாக்கலாம்.

நாங்கள் ஆடிய விதத்தை பார்த்தவுடன் ஆடுகளம் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது என நினைத்து விட வேண்டாம். ஹர்திக் பாண்டியா பந்தின் வேகத்தை குறைத்து தொடர்ந்து வீசினார். இதனால் பந்து பேட்டிற்கு வரவில்லை. நாங்கள் இன்று நல்ல ஸ்கோரை குவித்திருக்கின்றோம். நாங்கள் மும்பையில் கடந்த ஆறு போட்டிகளாக எம்ஐ அணிக்கு எதிராக நின்றதில்லை. எப்படி நாங்கள் சேப்பாக்கத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றோமோ அதை போல் இன்றும் நாங்கள் வெல்வோம். ஏனென்றால் எங்கள் அணியில் பலம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

Story first published: Monday, April 7, 2025, 21:56 [IST]
Other articles published on Apr 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+