Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: சிறந்த பிளேயிங் லெவன் யார்? 2 ஸ்டார் வீரர்கள் பெயரை சேர்க்காத முன்னாள் வீரர்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் சிறந்து விளையாடிய வீரர்களை கனவு அணியாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்திருக்கிறார். இதில் அவர் எந்த வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்?

யாருக்கு இடம் வழங்கவில்லை என்பதை தற்போது பார்க்கலாம். முதலில் நான் தொடக்க வீரராக சாய் சுதர்சனை சேர்க்கின்றேன். ஏனென்றால் அவர்தான் நடப்பு சீசனில் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை வென்றிருக்கிறார். இந்த சீசனில் அவர் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இந்த சீசன் முடிவில் அவருக்கு நிறைய விருதுகள் கிடைத்தது.

Akash chopra

இதன் மூலம் அவர் கோப்பைகளின் அரசனாக திகழ்ந்தார். அவருக்கு துணையாக விராட் கோலியை நான் தேர்வு செய்வேன். விராட் கோலி நடப்பு சீசனில் அபாரமாக விளையாடி இருக்கிறார். சொந்த மண்ணுக்கு வெளியே பல அரை சதத்தை அவர் அடித்திருக்கிறார். அவர் அரைசதம் அடித்த போதெல்லாம்,ஆர் சி பி அணி வெற்றி பெற்றிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

மூன்றாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லரை நான் தேர்வு செய்வேன்.அவரும் 500 ஆண்டுகளுக்கு மேல் அடித்திருக்கிறார். எனக்கு ஹென்றிச் கிளாஸினை சேர்ப்பதா பட்லரை சேர்ப்பதா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் ஹென்றிச் கிளாசன் அணியில் வெற்றிக்கு உதவும் வகையில் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை. அந்த விஷயத்தில் பட்லரை நான் தேர்வு செய்து இருக்கின்றேன்.

நான்காம் இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்து இருக்கிறேன். அவர் நடப்பு சீசனில் பேட்டிங் மட்டுமல்லாமல் சிறந்த கேப்டனாகவும் விளங்கி இருக்கின்றார். பெங்களூர் அணிக்கு எதிராக மட்டும் தான் அவர் ரன்கள் சேர்க்கவில்லை. ஐந்தாவது வீரராக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்திருக்கின்றேன். அவர் நடப்பு சீசனில் மதிப்புமிக்க வீரர் விருதை வென்றுள்ளார்.

தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் 25 ரன்களுக்கு மேல் சூரியகுமார் அடித்திருக்கின்றார். ஆறாம் இடத்தில் நான் சிஎஸ்கே வீரர் பிரவீசை சேர்த்திருப்பேன். இந்த இடத்திற்கு ஷசாங் சிங், நமன் தீர் போன்ற வீரர்கள் இருந்தாலும் நான் பிரெவீசை தேர்வு செய்துள்ளேன். ஏழாவது இடத்தில் நான் குர்னல் பாண்டியாவை சேர்த்து இருக்கின்றேன். அவர் ஒரு ஐபிஎல் ஜாம்பவான்.

நீங்கள் நம்பினால் நம்புங்கள் அவர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் இரண்டு ஆட்ட நாயகன் விருதை வாங்கி இருக்கின்றார். நடப்பு சீசனில் மட்டும் மூன்று முறை ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றிருக்கிறார். எட்டாவது இடத்தில் பும்ராவை நான் எப்போதும் சேர்ப்பேன். ஒரு போட்டி மட்டும்தான் சரியாக அவருக்கு அமையவில்லை. மற்ற போட்டிகள் எல்லாம் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். அவர் நமது இந்திய கிரிக்கெட்டின் கோஹினூர் வைரம். ஒன்பதாவது இடத்தில் சிஎஸ்கே வீரர் நூர் அகமதை சேர்த்திருக்கின்றேன். அவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் நிற தொப்பி வென்றார்.

பத்தாவது இடத்தில் நான் ஹேசல்வுட்டை தேர்வு செய்வேன். ஏனென்றால் அவர் இறுதிப் போட்டியில் இதுவரை தோற்றதே கிடையாது. ஹேசல்வுட் இல்லாத ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் ஆர்சிபி அணி 200 ரன்களுக்கு மேல் கொடுத்திருக்கின்றது. பத்தாவது இடத்தில் நான் பிரசித் கிருஷ்ணாவை சேர்த்து இருக்கின்றேன். ஏனென்றால் அவர்தான் பர்பிள் நிற தொப்பியை வென்றிருக்கிறார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இந்த அணியில் சுப்மன் கில், கேஎல் ராகுல் பெயரை ஆகாஷ் சோப்ரா சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 5, 2025, 17:23 [IST]
Other articles published on Jun 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+