Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: எங்களுடைய திட்டமே இது தான்..சொந்த மண்ணில் 3 போட்டிக்கு பிறகு வென்றது மகிழ்ச்சி-விராட் கோலி

பெங்களூர்: ஐபில் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி இன்று தங்களுடைய சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த போட்டியில் விராட் கோலி மீண்டும் ஒரு அரை சதம் அடித்திருக்கிறார். விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் எப்போதுமே ஒரு விமர்சனத்தை பெற்ற நிலையில் தற்போது 160க்கு மேல் ஸ்டிரைக் ரைட்டை வைத்து ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் வெற்றி குறித்து விராட் கோலி பேசியதை தற்போது பார்க்கலாம். சொந்த மண்ணில் நாங்கள் மூன்று சுமாரான போட்டிகளில் விளையாடி தோல்வியை தழுவினோம். இது குறித்து நாங்கள் விவாதித்து ஒரு பேட்டிங் வரிசையில் என்ன செய்தால் வெற்றி கிடைக்கும் என்பது குறித்து பேசினோம்.

Virat Kohli

நாங்கள் அபாரமாக செயல்பட்டு இன்று நல்ல இலக்கை நிர்ணயித்து இருக்கின்றோம். நாங்கள் அடித்த ஸ்கோரை பார்த்தவுடன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். அது மட்டும் இல்லாமல் பனிப்பொழிவு இருந்ததால் இரண்டாவது இன்னிங்ஸின்போது பந்து பேட்டிற்கு நன்றாக வந்தது. இதன் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர்கள் பிரமாதமாக ஷாட்களை ஆடி எங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார்கள்.

ஆனால் நாங்கள் மீண்டும் போராடி தான் ஆட்டத்திற்குள் வந்து வெற்றியைப் பெற்று தற்போது இரண்டு புள்ளிகளை அடைந்து இருக்கின்றோம். எங்களுக்கு இருக்கும் முதல் சவாலே டாசை வெல்வது தான். நாங்கள் பந்து வீசும் போது பனிப்பொழிவு அதிகம் இருந்தது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது நல்ல இலக்கிற்கு மேல் அடிக்க வேண்டும் என்று கடுமையாக போராடினோம்.

எங்களுடைய திட்டமே மிகவும் சிம்பிளானது. ஒரு வீரர் தொடர்ந்து இருபது ஓவர் வரை பேட்டிங் செய்ய வேண்டும். மறு வீரர் அவரை சுற்றி அதிரடியாக விளையாட வேண்டும். இந்த மைதானம் எவ்வாறு செயல்படும் என்று தேவுதட் படிக்கலுக்கும் எனக்கும் நன்றாகவே தெரியும். எனவே சால்ட் அவருடைய இயல்பான ஆட்டத்தை ஆடட்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

புதிய பந்து நன்றாக பவுன்ஸ் ஆனது. இதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டு ரன்ளை சேர்த்தோம். நாங்கள் ஒரு அணியாக நன்றாக விளையாடுகின்றோம். எனினும் ஒரு கட்டத்திற்கு ஒரு போட்டி என்று நாங்கள் எதிர்கொள்கிறோம் என்ன விராட் கோலி கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 24, 2025, 23:54 [IST]
Other articles published on Apr 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+