For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரூ.66 கோடி வருமான வரி கட்டும் விராட் கோலி.. தோனி எவ்வளவு கட்டுகிறார் தெரியுமா? முழு விவரம்!

மும்பை: இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக தொகையை வருமான வரியாக செலுத்துவோரின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி ரூ.66 கோடி வருமான வரி கட்டி வருவதாகவும், சிஎஸ்கே ஜாம்பவான் தோனி ரூ.38 கோடியை கட்டி வருவதும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 2 வாரங்களில் ஹோம் சீசன் தொடங்கவுள்ளது. வங்கதேசம் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூலமாக இந்திய அணி ஹோம் சீசனை தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பலரும் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

ipl 2025 income tax virat kohli

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடற்பயிற்சி கூடத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு ஃபிட்னஸ் உடன் இருந்து வருகிறார். அதேபோல் நட்சத்திர வீரர் விராட் கோலி இங்கிலாந்தில் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். ஹர்திக் பாண்டியா விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில், ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக வருமான வரி செலுத்துவோரின் பட்டியலை ஃபார்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். அவர் மொத்தமாக வருமான வரியாக மட்டும் ரூ.66 கோடி கட்டி வருகிறார். அதேபோல் 2வது இடத்தில் 2020ஆம் ஆண்டிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் தோனி இருந்து வருகிறார்.

அவர் வருமான வரியாக மட்டும் ரூ.38 கோடி கட்டி வருகிறார். இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 3வது இடத்தில் இருக்கிறார். அவர் மொத்தமாக ரூ.28 கோடியை வருமான வரியாகவும், இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ரூ.23 கோடி வருமான கட்டுவதன் மூலமாக 4வது இடத்திலும் இருக்கிறார்.

அதேபோல் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ரூ.13 கோடியை வருமான வரியாகவும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ரூ.10 கோடியையும் வருமான வரியாக கட்டி வருகிறார். அதேபோல் சினிமா நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது விராட் கோலி 5வது இடத்திலும், தோனி 7வது இடத்திலும் இருக்கின்றனர். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாப் 20 இடங்களில் இல்லை என்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, September 5, 2024, 6:00 [IST]
Other articles published on Sep 5, 2024
English summary
IPL 2025: Virat Kohli tops in the list of Highest Tax Paying cricketers and Rohit sharma misses in the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+