சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி அபாரமாக விளையாடி வருகிறது. இதுவரை வெளியூரில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற பெருமையை ஆர்சிபி படைத்திருக்கிறது.
இதனால் 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஐசிசி உலகக் கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆகியவற்றை வென்ற விராட் கோலி இதுவரை ஐபிஎல் கோப்பை மற்றும் வெல்லவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதை வென்றால் எப்படி இருக்கும் என்பதை ஒரு முறையாவது நான் அனுபவித்து விட வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கோலி கூறி இருந்தார். இந்த வகையில் குவாலிஃபயர் ஒன்று போட்டியில் பஞ்சாப் அணியை 101 ரன்களில் ஆர்சிபி சுருட்டியது.
ஆர்சிபியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இம்பேக்ட் வீரராக ஒரு பேட்ஸ்மேனே வர வைக்கும் நிலை ஏற்பட்டது. விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்த போது சர்பராஸ் கானின் தம்பி முசிர்கான் நேற்று தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்து வீரர்களுக்கு வழங்கினார். ஆனால் போதிய பேட்ஸ்மேன்கள் இல்லாததால் இம்பாக்ட் வீரராக அவரையே மீண்டும் பஞ்சாப் அணி அனுப்பியது.
இதை கவனித்த விராட் கோலி சக வீரர்களிடம் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாரே, அந்தப் பையனை திருப்பி பேட்டிங்கிற்கு அனுப்பி இருக்கிறார்கள் என்று கூறி விராட் கோலி கிண்டல் அடித்திருக்கிறார். முஷிர் கான் தற்போது தான் அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்.
பிரபல கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் தம்பியான முசீர் கான் நேற்று தான் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார் ஆனால் முசிர்கானின் உத்வேகத்தை குலைக்கும் விதமாக அவரை வாட்டர் பாய் என்று விராட் கோலி அழைத்து இருப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் விராட் கோலி செய்தது சரியல்ல என்று விமர்சித்து வருகிறார்கள். ஆனால் விராட் கோலி இதனை சாதாரணமாக தான் சொன்னார் என்று ஆர் சி பி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.