For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி தலையில் வந்த ஆரஞ்ச் கிரீடம்! ஸ்லோ இன்னிங்ஸ் ஏன்? ஒவ்வொரு சீசனிலும் அடித்த ரன்கள் எவ்வளவு

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விராட் கோலி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். நடப்பு சீசனில் 10 போட்டியில் விளையாடியுள்ள விராட் கோலி மொத்தமாக 443 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஆறு அரை சதம் அடங்கும். சராசரி 63 என்ற அளவிலும், ஸ்ட்ரைக் ரேட் 138 என்ற அளவில் இருக்கின்றது.

இன்று மாலை நடைபெற்ற போட்டியில் தான் சூரியகுமார் யாதவும் ஆரஞ்சு நிற தொப்பியை வென்ற நிலையில் அதனை தற்போது விராட் கோலி கைப்பற்றி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி, இன்று நாங்கள் பெற்றது மிகச்சிறந்த வெற்றியாக நினைக்கின்றேன்.

Virat Kohli

ஏனென்றால் ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் இங்கு நடைபெற்ற சில போட்டிகளை பார்த்தோம். ஆனால் அந்தப் போட்டிக்கும் இந்த போட்டிக்குமான ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமாக அமைந்து இருக்கிறது. எப்போதெல்லாம் நாங்கள் சேஸ் செய்கின்றோமோ அப்போதெல்லாம் நான் எங்கள் அணி உடன் தொடர்பில் தான் இருப்பேன்.

நாங்கள் சேஸிங்கில் சரியான திசையில் செல்கின்றோமா. இதில் என்னுடைய பணி என்ன? நான் எந்த மாதிரி இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பது குறித்து கேட்டு கொள்வேன். நாங்கள் ஆரம்பத்தில் சில நெருக்கடிகளை சந்தித்தோம். ஆனால் நானும் குர்னல் பாண்டியாவும் சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்கும். இன்று அவர் பேட்டிங்கில் அபாரமாக விளையாடினார்.இன்றைய ஆட்டத்தில் குர்னல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

குர்ணல் பாண்டியா பேட்டிங்கிலும் ரன்கள் சேர்க்க நான் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று முழுக்க முழுக்க அவருடைய நாள். மிகவும் சிறந்த வீரர் என்பதை மீண்டும் அவர் விரும்பி கொண்டிருக்கிறார். நான் எந்த இலக்கை சேஸ் வேண்டும். கள சூழல் எவ்வாறு இருக்கின்றது. இன்னும் எந்த பவுலர்கள் எஞ்சி இருக்கிறார்கள், யார் ஓவர்களை வீசப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு நெருக்கடியை ஏற்படுத்துவார்கள் என்பதை எல்லாம் பார்த்து தான் ரன்கள் சேர்ப்பேன்.

முடிந்தவரை சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் ரன்களை ஓட முயற்சி செய்வேன். இதன் மூலம் ஸ்கோர் தேங்கி இருந்து விடாது. ஏதேனும் ஒரு மோசமான பந்தை பௌண்டரிக்கு அடிப்பேன். இது தான் என்னுடைய குறிக்கோளாக இருக்கின்றது. பந்தை வீணடிக்காமல் சிங்கிள்ஸ் அதிகம் எடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றேன்.

ஸ்ட்ரைக் ரேட் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். இதனால் பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவத்தை பலரும் மறந்து விடுகிறார்கள். போட்டியை இன்னிங்ஸ் கடைசி வரை தற்போது கொண்டு செல்ல வேண்டும். முதல் பந்தில் ரன்களை அடிக்க வேண்டும் என நினைக்கின்றேன். கள சூழல் எவ்வாறு இருக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தொழில் முறை கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை.

இன்று ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்ததால் பந்து பேட்டிற்கு வரவில்லை. எனவே இந்த ஆடுகளத்தில் என்னை போல் விளையாட வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். ஜித்தேஷ் சர்மா ஆகியோர் பேட்டிங் செய்ய வருவார்கள் என்று எனக்கு தெரியும். இதனால் ரைட் ரேட் குறித்து நான் கவலைப்படவில்லை. ஹேசல்வுட், புவனேஸ்வர் குமார் போன்ற தலைசிறந்த பவுலர்களும் எங்கள் அணியில் இருக்கிறார்கள். தற்போது பர்பிள் தொப்பியும் எங்கள் அணி வீரரிடம் தான் இருக்கின்றது. சுயேஸ் ஷர்மா எங்கள் அணியின் வெளியில் அவ்வளவாக அறியப்படாத பந்தயத்தை அடிக்கும் குதிரையாக இருக்கின்றார். எங்கள் பவுலர்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் ரன்களை விட்டுக் கொடுக்காமல் செயல்படுகிறார்கள் என்று விராட் கோலி பாராட்டினார்.

விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் தொடர்பாக பல விமர்சனங்கள் வந்து நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது அவர் பேசியிருக்கிறார் விராட் கோலி ஆரஞ்சு நிற தொப்பி வென்றது. இது முதல் முறை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் கடந்த சீசனில் அவர்தான் ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ள கோலி, 2014 ஆம் ஆண்டு ஒரே தொடரில் 973 ரன்கள் அடித்து சாதனை படைத்திருந்தார். மேலும் ஐபில் வரலாற்றில் 8000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் ஒரே வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்றால் அது விராட் கோலி தான். இவரை 262 போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி மொத்தமாக 8447 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 113 ரன்கள் ஆகும். என்னுடைய சராசரி 39 என்ற அளவில் இருக்கிறது. ஸ்ட்ரைக் ரேட் 132 என்ற அளவில் இருக்கிறது. விராட் கோலி மொத்தமாக 8 சதமும், 61 அரைசதமும் அடங்கும். கடந்த 2024 ஆம் ஆண்டு சீசனில் 15 போட்டியில் விளையாடியுள்ள விராட் கோலி 741 ரன்கள் அடித்திருந்தார்.

2023 ஆம் ஆண்டு 14 போட்டியில் விளையாடிய விராட் கோலி 639 ரன்களும், 2022 ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 341 ரன்களும், 2021 ஆம் ஆண்டு 15 போட்டியில் விளையாடிய விராட் கோலி 405 ரன்கள், 2020 ஆம் ஆண்டு 15 போட்டியில் விளையாடிய விராட் கோலி 466 ரன்களும், 2019 ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 464 ரன்களும், 2018 ஆம் ஆண்டு 14 போட்டிகள் விளையாடிய விராட் கோலி 530 ரன்களும் அடித்து இருக்கிறார்.

2017 ஆம் ஆண்டு 10 போட்டியில் விளையாடிய விராட் கோலி 308 ரன்களும், 2016 ஆம் ஆண்டு 16 போட்டியில் விளையாடிய விராட் கோலி 973 ரன்களும், 2015 ஆம் ஆண்டு 16 போட்டியில் விளையாடிய கோலி 505 ரன்களும், 2014 ஆம் ஆண்டு 14 போட்டியில் விளையாடிய கோலி 359 ரன்களும், 2013ஆம் ஆண்டு 16 போட்டியில் விளையாடிய விராட் கோலி 634 ரன்களும், 2012 ஆம் ஆண்டு 16 போட்டியில் விளையாடிய விராட் கோலி 364 ரன்களும், 2011 ஆம் ஆண்டு 16 போட்டியில் விளையாட விராட் கோலி 551 ரன்களும், 2019 ஆம் ஆண்டு 16 போட்டியில் 246 ரன்களும், 2008 ஆம் ஆண்டு 13 போட்டியில் விளையாடிய கோலி 165 ரன்களும் அடித்துள்ளார்.

Story first published: Sunday, April 27, 2025, 23:44 [IST]
Other articles published on Apr 27, 2025
English summary
IPL 2025- Virat Kohli won the orange cap as He explains about his role
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+