Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: அணிவகுத்து நின்ற 2 அணிகளின் வீரர்கள்.. திடீரென இசைக்கப்பட்ட தேசிய கீதம்.. காரணம் என்ன?

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு முன்பாக இரு அணிகளின் வீரர்களும் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசிய கீதம் பாடினர். ஐபிஎல் தொடரில் தேசிய கீதம் பாடப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடி வருகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக மே 8ஆம் தேதியுடன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்திய ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் விமான தளத்தை அட்டாக் செய்தனர்.

IPL 2025 What is the reason behind National anthem played before the start of the Match between RR vs PBKS at Jaipur

இதன்பின் இரு நாட்டு நிர்வாகிகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில், அமைதி திரும்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்பின் இரு நாடுகளின் வீரர்களும் எந்தவித தாக்குதலையும் நடத்தாமல் அமைதி காத்து வருகின்றனர். இதன் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உடனடியாக புதிய அட்டவணையுடன் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி மே 17 ( நேற்று ) முதல் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கியது. முதல் போட்டி டாஸ் கூட போடப்படாமல் மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, இரு அணிகளின் கேப்டன்களும் தங்களின் வீரர்களுடன் மைதானத்திற்குள் அணிவகுத்து நின்றனர். அப்போது அங்கிருந்த ஒளிபரப்பு பலையில், இந்திய ராணுவத்திற்கு நன்று என்ற வாசகங்கள் இருந்தது. இதன்பின் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட, அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தனர்.

இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் இந்திய ராணுவத்திற்கு நன்றி சொல்லும் வகையில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் தாக்குதலின் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் எல்லையோர மாவட்டங்களை தீரத்துடன் காத்து நின்றனர். இதனால் ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த செயல்பாடு ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

Story first published: Sunday, May 18, 2025, 16:31 [IST]
Other articles published on May 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+