Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதிக் கட்டத்தை நெருங்கும் ஐபிஎல் 2025.. பிளே ஆப்க்கு செல்லப்போகும் 4 அணி எது? ஜாம்பவான்கள் கணிப்பு

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் 15 போட்டிகள் தான் எஞ்சி இருக்கிறது. இந்த சூழலில் சிஎஸ்கே, ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

இந்த சூழலில் ஆர்ச பி முதலிடத்திலும், பஞ்சாப் இரண்டாவது இடத்திலும், மும்பை மூன்றாம் இடத்திலும், குஜராத் நான்காவது இடத்திலும் உள்ளது. மேலும் பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி, கொல்கத்தா, லக்னோ ஆகிய மூன்று அணிகளும் போட்டி போடுகின்றன.

IPL Playoffs

தற்போது போட்டியில் 7 அணிகள் இருக்கிறது. இந்த சூழலில் பிளே ஆப் சுற்றில் எந்த அணி தகுதி பெற வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். அதை தற்போது பார்க்கலாம். இது தொடர்பாக கணிப்பை வெளியிட்டுள்ள அணில் கும்ப்ளே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப் அல்லது குஜராத் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று தெரிவித்து இருக்கிறார்.

இதேபோன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கையிப் வெளியிட்டுள்ள கணிப்பில், ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என தெரிவித்திருக்கிறார். மும்பை அணியை அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வெளியிட்டுள்ள கணிப்பில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்று கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

அதேபோன்று முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா வெளியிட்டுள்ள கணிப்பில், மும்பை இந்தியன்ஸ், டெல்லி, பஞ்சாப் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்று கணிப்பு வெளியிட்டு இருக்கிறார். தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆர்சிபி அணியை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் கடைசி 15 நாட்கள் இருப்பதால் கடைசி கட்டத்தில் எந்த அணிகள் தொடர் வெற்றியை பெறுகிறார்களோ அவர்களுக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

Story first published: Tuesday, May 6, 2025, 13:56 [IST]
Other articles published on May 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+