Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 மெகா ஏலம் மூலம் எந்த அணிகளுக்கு லக் அதிகம்.. யாருக்கு எல்லாம் சாதகம்?

மும்பை : ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் அது பல அணிகளுக்கு பாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது சில அணிக்கு சாதகமாகவும் அமைந்திருக்கிறது. மெகா ஏலத்தை பயன்படுத்தி ஒவ்வொரு அணியும் பலமான வீரர்களை வாங்கி அணியை மேலும் பலப்படுத்த முடியும்.

இந்த நிலையில் எந்த அணிகள் ஐபிஎல் மெகா ஏலம் மூலம் பலம் பெற முடியும் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பது ஆர்சிபி அணி தான். ஆர்சிபி மினி ஏலத்தில் பல வீரர்களை விடுவித்து மீண்டும் சரியான வீரர்களை வாங்க முடியாமல் போனது.

ipl 2025 ipl retention cricket csk

இந்த நிலையில் மெகா ஏலத்திற்கு முன்பு ஆர்சிபி அணி விராட் கோலி, முகமது சிராஜ், வில் ஜேக்ஸ் அல்லது டுபிளசிஸ் போன்ற வீரர்களை தக்க வைத்து விட்டு மற்ற வீரர்களை விடுவித்துக் கொள்ளலாம். இதன் மூலம் அதிக பணத்துடன் மெகா ஏலத்தில் பங்கேற்று மற்ற அணியின் நட்சத்திர வீரர்களை ஆர்சிபி அணியால் வாங்க முடியும்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது சிஎஸ்கே அணி. சிஎஸ்கே யார் யாரை தக்க வைக்கும் என்று குழந்தைகளிடம் கேட்டாலே தெரியும். மேலும் அவர்கள் எப்போதுமே தங்கள் அணியில் இருக்கும் வீரர்களை தான் ஏலத்தில் மீண்டும் தேர்வு செய்வார்கள். அத்துடன் கூடுதலாக இரண்டு ஸ்டார் வீரர்களை தேர்வு செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் தோனி தன்னுடைய ஊழியத்தை குறைத்துக் கொண்டிருப்பதன் மூலம் சிஎஸ்கே அணியின் கையிருப்பு தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், ரியான் பராக் போன்ற வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும்.

மேலும் எந்தெந்த வீரர்கள் தமக்கு வேண்டும் என்பதை மெகா ஏலம் மூலம் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு ராஜஸ்தான் அணிக்கு இருக்கின்றது. இதேபோன்று பஞ்சாப் அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மற்றவர்களை விடுவித்து, மீண்டும் ஏலம் மூலம் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது. இதன் மூலம் பஞ்சாப் அணியும் பலம் பெற முடியும்.

Story first published: Sunday, August 25, 2024, 11:09 [IST]
Other articles published on Aug 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+