For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: அடுத்த 7 நாட்கள் நடைபெறும் போட்டியில் எந்த அணி வென்றால், சிஎஸ்கே-க்கு நல்லது?

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. மொத்தம் உள்ள 70 லீக் ஆட்டத்தில் தற்போது வரை 41 லீக் ஆட்டம் முடிவடைந்து இருக்கிறது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் தற்போது பத்தாவது இடத்தில் இருக்கிறது.

விளையாடிய 8 போட்டிகளில் ஆறு போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவிய நிலையில், இன்னும் எஞ்சிருக்கும் ஆறு போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் சிஎஸ்கே இருக்கிறது.

CSK Playoff chances

அது மட்டுமில்லாமல் சிஎஸ்கே அணிக்கு மற்ற அணிகளின் தயவும் தேவைப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த ஏழு நாட்கள் நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணிக்கு நல்லது என்பதை தற்போது பார்க்கலாம். இன்று ஆர் சி பி, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் அது சிஎஸ்கேவுக்கு நல்லது.

ஒருவேளை ஆர் சி பி அணி வெற்றி பெற்றாலும் அது சிஎஸ்கேவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. நாளை நடைபெறும் சிஎஸ்கே சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இவ்வாறு நடைபெறும் பட்சத்தில் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பு குறைந்துவிடும்.

இதேபோன்று கொல்கத்தா, பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற வேண்டும். பஞ்சாப் வெற்றி பெற்றால் அவர்களுடைய பிளே ஆப் சுற்றி வாய்ப்பு பிரகாசமாகிவிடும். மும்பை, லக்னோ அணிக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் டெல்லி, ஆர் சி பி அணிக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற வேண்டும். திங்கட்கிழமை இரவு நடைபெறும் ராஜஸ்தான் குஜராத் அணிக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற வேண்டும். ஏப்ரல் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை டெல்லி, கொல்கத்தா அணிக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி வெல்ல வேண்டும்.

30ஆம் தேதி சிஎஸ்கே பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும். மே ஒன்றாம் தேதி மும்பை ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற வேண்டும். மே இரண்டாம் தேதி குஜராத் சன்ரைசர்ஸ் அணிக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற வேண்டும். மே 3 ஆர் சி பி,
சி எஸ் கே அணி எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெல்ல வேண்டும்.

Story first published: Thursday, April 24, 2025, 13:39 [IST]
Other articles published on Apr 24, 2025
English summary
IPL 2025- Which Team need to win for CSK Playoff chances
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+