சென்னை: ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது கடைசி இடத்தில் இருக்கிறது. எஞ்சியிருக்கும் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக முடிவு கிடைக்க வேண்டும் என்றால் எந்தெந்த அணி இனி வெற்றி பெற வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இன்று சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும்.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற வேண்டும். இதுபோன்று சன்ரைசர்ஸ், குஜராத் அணிகள் மோதும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற வேண்டும். ஆர் சி பி க்கு எதிராக சிஎஸ்கே மோதும் ஆட்டத்தில், சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும். கொல்கத்தா, ராஜஸ்தான் அணிக்கு இடையிலான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும்.
பஞ்சாப், லக்னோ அணிக்கு இடையிலான ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற வேண்டும். சன்ரைசர்ஸ், டெல்லி அணிக்கு இடையிலான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற வேண்டும். மும்பை, குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெற வேண்டும்.
கொல்கத்தா, சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும். பஞ்சாப், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற வேண்டும். லக்னோ, ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற வேண்டும். சன்ரைசர்ஸ், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற வேண்டும்.
பஞ்சாப், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெல்ல வேண்டும். டெல்லி, குஜராத் அணிக்கு இடையிலான ஆட்டத்தில் குஜராத் அணியும் சிஎஸ்கே ராஜஸ்தான் அணிக்கு இடையிலான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும் வெற்றி பெற வேண்டும். ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற வேண்டும்.
குஜராத், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற வேண்டும். மும்பை, டெல்லி அணிக்கு இடையிலான ஆட்டத்தில் டெல்லி அணியும், ராஜஸ்தான் பஞ்சாப் அணி இடையிலான ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற வேண்டும். ஆர்சிபி, கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெல்ல வேண்டும். குஜராத் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும் லக்னோ சன்ரைசர்ஸ் அணிக்கு இடையிலான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியும் வெல்ல வேண்டும்.