மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் இடம் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபையர் 1 போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது.
இதனால் மும்பை அணி எலிமினேட்டர் சுற்றில் களமிறங்க போகிறது. இது நாக் அவுட் போட்டி என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான அடைந்த தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா அணியின் பேட்ஸ்மேன்கள் கூடுதலாக 20 ரன்கள் அடிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இது குறித்து பேசிய அவர், இந்த மாதிரியான ஆடுகளத்தில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். நாங்கள் கடந்த சில நாட்களாக நல்ல விதமான கிரிக்கெட்டை ஆடி வந்தோம். ஆனால் இன்று அப்படி முடியவில்லை. நாங்கள் ஐந்து கோப்பைகளை வென்று இருக்கிறோம்.
ஐந்து முறைகளையும் இந்த பயணம் கடுமையாக தான் இருந்தது. கொஞ்சம் அசந்தாலும் மற்ற அணிகள் உங்களை முந்தி விடுவார்கள். நான் எனது வீரர்களுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். தவறு என்று பாடம் கற்றுக் கொள்ளுங்கள். தற்போது நாக் அவுட் போட்டிகளை எதிர்நோக்கி இருக்கின்றோம்.
அதில் உள்ள சவால்களை எதிர்கொண்டு விளையாட வேண்டும். எங்கள் அணியில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பது குறித்து விவாதிப்போம். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் இன்னும் தங்கள் திறனை வெளிப்படுத்தி கூடுதலாக 20 ரன்களை சேர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
இன்று ஆடுகளத்தில் பெரிய அளவு மாற்றம் ஏற்படவில்லை. இதனால் தான் அஸ்வினியை நாங்கள் பயன்படுத்தினோம். எங்களுடைய பவுலிங்கும் இன்று எடுபடவில்லை. பஞ்சாப் அணி வீரர்கள் சிறப்பான ஷாட்களை ஆடினார்கள். இனிவரும் காலங்களில் நல்ல கிரிக்கெட்டை விளையாட முயற்சி செய்வோம்.
எங்களுடைய பேட்டிங்கிற்கு எது சரியான ஃபார்முலாக அமையும் என்பது குறித்து யோசிப்போம்.தற்போது நாங்கள் பதற்றம் அடையவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு எப்படி சூழல் இருந்ததோ ,அதே போல் ஒரு சூழலில் தான் மீண்டும் நாங்கள் இருக்கின்றோம்என்று ஹர்திக் கூறினார்.