Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025:ஒவ்வொரு சீசன் பைனலிலும் முதலில் பேட்டிங் ,2வது பேட்டிங் செய்த அணிகளில் யார் கோப்பை வென்றது?

மும்பை: ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசனில் இறுதி போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இதில் இதுவரை கோப்பையை வெல்லாத ஆர் சி பி அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த நிலையில் இறுதி போட்டியில் டாஸ் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

ஒவ்வொரு சீசனிலும் இறுதிப்போட்டியில் பேட்டிங் முதல் செய்த அணி சாம்பியன் பட்டம் வென்றதா, இல்லை சேசிங் செய்த அணி சாம்பியன் பட்டம் வென்றதா என்பதை தற்போது பார்க்கலாம். 2008 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

IPL Finals

2009 ஆம் ஆண்டு முதலாவதாக பேட்டிங் செய்த டெக்கான் சார்ஜஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டு முதலாவதாக பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி சேசிங் செய்யும் போது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2015 ஆம் ஆண்டு முதலாவதாக பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை இறுதிப் போட்டியில் கைப்பற்றியது.

2016 ஆம் ஆண்டு முதலாவதாக பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை ஆர் சி பிக்கு எதிராக கைப்பற்றியது. 2017 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து சாம்பியன் பட்டத்தை இறுதிப்போட்டியில் கைப்பற்றியது. 2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து இறுதிப் போட்டியில் கோப்பையை கைப்பற்றியது.

2019 ஆம் ஆண்டு மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்றியது. 2020 ஆம் ஆண்டு மும்பை அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து கோப்பையை கைப்பற்றியது. 2021 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2022 ஆம் ஆண்டு குஜராத் அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து கோப்பையை வென்றது.

2023 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து கோப்பையை கைப்பற்றியது. 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றது. இதுவரை நடைபெற்ற 17 இறுதிப் போட்டியில் எட்டு முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 9 முறை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியும் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

Story first published: Tuesday, June 3, 2025, 15:56 [IST]
Other articles published on Jun 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+