Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் எடுத்தவர்.. யார் இந்த அன்சூல் காம்போஜ்? சிஎஸ்கேவில் அறிமுகம்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வந்தது. இந்த சூழலில் சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். பேட்டிங்கில் வான்ஸ் பேடிக்கும் பந்துவீச்சில் அன்சில் காம்போஜ்க்கும் பிளேயிங் லெவனனில் இடம் கொடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்களும் கூறிவந்தனர்.

இந்த சூழலில் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக தலைமை தாங்கிய பிறகு அணியில் தற்போது அதிரடி மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. 24 வயது வீரரான ஆல் ரவுண்டர் அன்சூல் காம்போஜை சிஎஸ்கே அணி தற்போது பிளேயிங் லெவனின் சேர்த்திருக்கிறது.

Anshul Kamboj

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2024 ஆம் ஆண்டு சீசனில் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் அன்சூல் காம்போஜ் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக விளையாடி இருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் 2024 ஆம் ஆண்டு ரஞ்சிப் போட்டியில் ஹரியானா அணிக்காக விளையாடிய கம்போஜ், கேரள அணிக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஆஸ்திரேலிய வீரர் மெகராத்தை தன்னுடைய ரோல் மாடலாக எடுத்துக் கொண்டிருக்கும் அன்சூல் கம்போஜ் ஆறு அடி இரண்டு அங்குலம் உயரம் கொண்டவர். அவரைப்போலவே பந்து வீசும் அன்சூல் காம்போஜ் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடுவார். 2022-23 சையது முஸ்தாக் அலி தொடரில் 10 போட்டியில் விளையாடி ஹரியானா அணிக்காக 17 விக்கெட் வீழ்த்தினார்.

இதேபோன்று தொடரில் இந்திய சி அணிக்காக விளையாடிய அன்சூர் காம்போஜ் 3 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அன்சூல் கம்போஜ் ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய வீரராக வர வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் கணித்திருந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அவருக்கு வாய்ப்பு வழங்க இருக்கிறது. ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி அன்சூல் காம்போஜை மூன்று கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 11, 2025, 20:51 [IST]
Other articles published on Apr 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+