ரிஷப் பண்ட்டை முட்டாள் என்று திட்டிய பெண்.. அனுஷ்கா சர்மா அருகில் இருந்த மாளவிகா நாயக் யார்?
லக்னோ: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணிகளுக்கு இடையேயான போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சதம் அடித்து தனது மோசமான ஃபார்மை தகர்த்தார். ரிஷப் பண்ட் தனது சதத்தை நிறைவு செய்தவுடன், சம்மர்சால்ட் அடித்துக்கொண்டாடினார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் ஒரு அரைசதம் மட்டுமே அடித்து இருந்தார். மற்ற போட்டிகளிலும் சொதப்பி இருந்தார். இந்த நிலையில் லக்னோ அணியின் கடைசி லீக் போட்டியில் அதிரடியாக சதம் அடித்து தனது ஃபார்மை மீட்டார். அதை கொண்டாடும் வகையில் சம்மர்சால்ட் அடித்தார்.
அப்போது கேமரா விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கித் திரும்பியது. அவர் சற்று கலக்கமடைந்தவராகக் காணப்பட்டார். ஆனால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அனுஷ்கா சர்மா அருகில் அமர்ந்திருந்த பெண் தான். பண்ட்டின் சம்மர்சால்ட் கொண்டாட்டத்திற்குப் பிறகு அவர் "முட்டாள்தனம்" என்று முணுமுணுத்தது பலரையும் கவனிக்க வைத்தது. அப்பெண் யார் என ரசிகர்கள் தேடத் துவங்கினர்.

வைரலான வீடியோவில் இருந்த பெண் யார்?
வைரலான வீடியோவில் அனுஷ்கா சர்மா அருகில் அமர்ந்திருந்த பெண் மாளவிகா நாயக் ஆவார். அவர் அனுஷ்காவுடன் போட்டிகளின் போது அடிக்கடி காணப்படுபவர்.
யார் இந்த மாளவிகா நாயக்?
மாளவிகா நாயக் ஒரு அனுபவம் வாய்ந்த வணிக மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர். அவருக்குப் பல ஆண்டுகளாக இத்துறையில் அனுபவம் உண்டு. அவர் Intelenet (Serco) போன்ற பெரிய நிறுவனங்களில் ஐ.டி. (IT) மற்றும் அவுட்சோர்சிங் பிரிவில் பணியாற்றியுள்ளார். பின்னர், எஸ்.எம்.எஸ். (SMS) அடிப்படையிலான தேடல் சேவைகளை (55444 போன்ற) வழங்கிய Innoz Technologies என்ற ஸ்டார்ட்அப் (Startup) நிறுவனத்தில் இணைந்தார்.
மாளவிகாவுக்கு வணிக மேம்பாடு, விற்பனை, கூட்டாண்மைகள் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் அனுபவம் உள்ளது. அவர் சந்தைப்படுத்தலில் எம்.பி.ஏ. (MBA) பட்டமும் பெற்றுள்ளார். பெரிய வாடிக்கையாளர்களுடன் பணியாற்றிய அனுபவம், தயாரிப்பு மேம்பாட்டிற்காக தொழில்நுட்பக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றியது, மற்றும் நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்க கவனம் செலுத்தியது போன்ற அனுபவங்களும் இவருக்கு உண்டு. சட்ட ஒப்பந்தங்கள் மற்றும் வணிகச் சட்டங்களை விளக்குவதிலும் இவருக்கு அறிவு உள்ளது.


Click it and Unblock the Notifications