Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: ருதுராஜ் இடத்திற்கு வரப்போகும் 17 வயது வீரர்.. போட்டியில் 4 பேர்.. யாருக்கு வாய்ப்பு?

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் யாருமே எதிர்பாராத வகையில் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திருக்கிறது. இன்னும் ருதுராஜ் பதில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனியே திரும்புகிறார்.

இந்த நிலையில் ருதுராஜ் சிஎஸ்கே அணியின் பேட்டிங் தூண்களில் ஒருவராக இருந்தார். தற்போது அவருக்கு பதில் வேறு யாருக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணியில் ஏற்கனவே ஒரு வெளிநாட்டு வீரர்களுக்கான இடம் காலியாகவே இருக்கிறது.

Ruturaj Replacement

இதனால் ருதுராஜ்க்கு பதிலாக வெளிநாட்டு வீரர்களை கூட தேர்வு செய்யலாம். அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தென்னாப்பிரிக்காவின் பிரவீஸ். நடந்து முடிந்த எஸ்ஏ டி20 தொடரின் பிரவீஸ் 291 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 48 ஆகும்.
184 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் இருக்கிறது.

மும்பை அணிக்காக விளையாடி வந்த பிரவீஸ் நடப்பு ஏலத்தில் விலை போகவில்லை. இதனால் பிரவீசை சிஎஸ்கே அணி பயன்படுத்தலாம். தற்போது அனைவரின் கவனமும் திரும்பி இருப்பது 17 வயது வீரரான ஆயுஸ் மாத்ரே மீதுதான். மும்பை அணிக்காக விளையாடிய ஆயுஷ் மாத்ரே விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் குவித்து இருக்கிறார். அவருடைய சராசரி 65 என்ற அளவில் இருக்கிறது.

ஸ்ட்ரைக் ரெட் 135 என்ற அளவில் உள்ளது. 17 வயது ஆன மாத்ரே சிஎஸ்கே அணியின் எதிர்கால வீரராக திகழ அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சிஎஸ்கே அணி அவரை தங்களது உடைய பயிற்சி முகாம்க்கு அழைத்து இருந்தது. இதனால் ஆயுஷ் மாத்ரே ருதுராஜ் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பவர் பிரித்வி ஷா ஐபிஎல் மெகா ஏலத்தில் பிரித்வி ஏலம் போகவில்லை. திறமை வாய்ந்த வீரராக பிரித்வி ஷா அறியப்பட்டாலும் அண்மைக்காலமாக அவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஒருவேளை தோனியின் கீழ் அவர் விளையாடினால், நிச்சயம் பழைய ஃபார்மை மீட்பார். இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் டேவிட் வார்னர். டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் ஏலம் போகவில்லை. இதனால் அவர் பி எஸ் எல் தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒருவேளை ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு அழைப்பு வந்தால் அவர் செல்லக்கூடும். எனினும் இதற்கான வாய்ப்பு குறைவு என தெரிகிறது.

Story first published: Friday, April 11, 2025, 14:12 [IST]
Other articles published on Apr 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+