Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- சிஎஸ்கேவில் நம்பர் 3வது வீரர் யார்? சுரேஷ் ரெய்னா இடத்தை நிரப்ப போகும் 5 வீரர்கள்

மும்பை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை ஐந்து முறை கைப்பற்றி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணமாக சுரேஷ் ரெய்னா விளங்கினார். நம்பர் மூன்றாவது வீரராக களம் இறங்கி பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி அணியின் ஒரு பவர் ஹவுஸ் ஆக சுரேஷ் ரெய்னா இருந்தார்.
இதன் காரணமாக எவ்வளவு கடினமான சூழல் இருந்தாலும் ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி பல போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த சூழலில் ரெய்னா சென்னை அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் அவருக்கு மாற்று வீரரை இன்னும் சிஎஸ்கே அணி கண்டுபிடிக்காமல் இருக்கின்றது. கடந்த தொடரில் அது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

ipl 2025 csk suresh raina ms dhoni

கேப்டன் ருதுராஜை மூன்றாவது வீரராக களம் இறக்கி ரெய்னாவில் இடத்திற்கு அவரைக் கொண்டு நிரப்ப முடியுமா என்ற சோதனையும் தோல்வியில் முடிந்தது. இந்த சூழலில் சிஎஸ்கே அணியில் மூன்றாவது வீரர் யார் என்ற கேள்விக்கு இந்த மெகா ஏலம் பதில் அளிக்கும். இந்த நேரத்தில் ரெய்னா இடத்தை நிரப்ப எந்த வீரர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அபாரமாக செயல்படக்கூடிய வெங்கடேஷ் ஐயரை, கொல்கத்தா அணி நீக்கி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அவர்களிடம் தற்போது ஆர்டிஎம் கார்டும் இல்லை.

இதனால் சிஎஸ்கே அணி வெங்கடேஷ் ஐயரை முயற்சி செய்து பார்க்கலாம். வெங்கடேஷ் ஐயர் இதுவரை 50 ஐ பி எல் போட்டிகளில் விளையாடி 1326 ரன்கள் அடித்திருக்கிறார். ரெய்னா போலவே அதிரடியாக ஆடக்கூடியவர் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் நிதிஷ் ரானா. 30 வயதான நிதிஷ் ரானாவை கே கே ஆர் அணி அதிரடியாக நீக்கி இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் 17 ஆட்டங்களில் விளையாடி 2636 ரன்கள் நிதிஷ் ரானா அடித்திருக்கிறார்.

ரெய்னாவைப் போலவே இடது கை பேட்ஸ்மனாக நிதிஷ் ரானா இருக்கின்றார். இதனால் நிதிஷ் ரானா சிஎஸ்கேவுக்கு வந்தால் நிச்சயம் நல்ல ஒரு பேட்ஸ்மனாக விளங்குவார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆர் சி பி அணிக்காக விளையாடிய அனுஜ் ராவத். 25 வயதான அனுஜ் ராவத் விக்கெட் கீப்பாராகவும் இருக்கின்றார். ஐபிஎல் தொடரில் 24 போற்றுக்களில் விளையாடி மொத்தமாக 318 ரன்கள் அடித்து இருக்கிறார்.

அனுஜ் ராவத்தை சிஎஸ்கே அணி நம்பி எடுத்தால் அவர் சாதிக்க வாய்ப்பு இருக்கின்றது.இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ராகுல் திருப்பாதி. ஐபிஎல் தொடரில் இதுவரை 95 போட்டிகளில் விளையாடி 2236 ரன்கள் அடித்திருக்கிறார்.அதிரடியாக விளையாடக்கூடிய ராகுல் திருப்பாதியை மூன்றாவது வீரராக களம் இறக்கி சிஎஸ்கே அணி நம்பிக்கை கொடுத்தால் அவரும் சாதிக்கலாம்.

அது மட்டும் இல்லாமல் ராகுல் திருப்பாதிக்கு சர்வதேச கிரிக்கெட் விளையாடிய அனுபவமும் இருக்கின்றது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய சமீர் ரிஸ்வி. வலது கை ரெய்னா என்று ரசிகர்கள் இவரை அழைப்பதுண்டு. ரிஸ்வியை சிஎஸ்கே அணி விடுவித்தாலும் அவரை மீண்டும் ஆர்டிஎம் கார்டு மூலம் எடுத்து பேட்டிங் வரிசையில் நம்பர் மூன்றாவது வீரராக அவரை களம் இறக்கினால், நிச்சயம் நல்ல எதிர்காலம் அவருக்கு இருக்கின்றது.

Story first published: Sunday, November 17, 2024, 10:19 [IST]
Other articles published on Nov 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+