IPL 2025: ஸ்ரேயாசை பார்த்து அநாகரீகமாக நடந்த கோலிக்கு மட்டும் ஏன் அபராதம் இல்லை.. பிசிசிஐ பாகுபாடு
மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சர்ச்சைக்கு உள்ளான வீரர் என்றால் அது திக்வேஷ் ரதி தான். லக்னோ அணிக்காக விளையாடும் திக்வேஷ், விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டு பேப்பரில் எழுதுவது போல் கொண்டாடுகிறார். இதற்கு பிசிசிஐ இரண்டு முறை அபராதம் விதித்தது.
இதனால் திக்வேஷ் அந்த கொண்டாட்டத்தை கைவிட்டார். இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றதும், விராட் கோலி ஆக்ரோஷமாக ஸ்ரேயாஸை பார்த்து மோசமாக கொண்டாடினார். இது சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனத்தை பெற்றது.

ஆனால் விராட் கோலி மீது இதுவரை எந்த ஒரு அபராதமும் விதிக்கப்படவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, லக்னோ வீரர் திக்வேஷ் ரதி நோட் புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது இரண்டு முறை அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது. இதனால் மூன்றாவது முறை பயந்து கொண்டு அவர் செய்யவில்லை.
ஏனென்றால் அவருக்கு பெரிய அளவு சம்பளம் ஐபில் தொடரில் கிடையாது .அபராதம் கட்டினால் ஒட்டுமொத்த பணமும் போய்விடும் என்பதால் தற்போது அவர் தன்னுடைய கொண்டாட்டம் ஸ்டைலை மாற்றி இருக்கிறார். ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி செய்த கொண்டாட்டம் மிகவும் ஆக்ரோஷமானது. ஆனால் அது குறித்து யாரும் அவரிடம் கேட்க கூட இல்லை.
யாரும் கருத்தும் சொல்லவில்லை. இவ்வாறு செய்வது தவறு என்றும் பேசவில்லை. ஆனால் திக்வேஷ் செய்த கொண்டாட்டத்திற்கு மட்டும் உடனே அபராதம் விதிக்கப்பட்டது. களத்தில் ஒரு முறை தோனி ஆக்ரோஷமாக நடந்து கொண்டார் என்பதால் அவருக்கு 50 சதவீதம் போட்டி ஊதியத்திலிருந்து அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் விராட் கோலிக்கு மட்டும் எந்த ஒரு அபராதமும் விதிக்கப்படவில்லையே அது ஏன் விராட் கோலிக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு இன்னொரு ஒரு மீது நடவடிக்கை எடுக்காமல் பிசிசிஐ இருக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications