Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: பந்தை தொப்பியால் எடுத்த ஆர்சிபி வீரர்.. 5 ரன்கள் நடுவர் பெனால்டி தராதது ஏன்? ICC விதி என்ன

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக வெற்றி பெற்று இருக்கிறது. நடப்பு சீசனில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் சின்னசாமி மைதானத்தில் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணி, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.

இதில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆர்சிபி அணி வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணி விளையாடிய போது ஒரு மிகப்பெரிய தவறு களத்தில் நடந்தது.

Suyash sharma


ஒன்பதாவது ஓவர் முடிந்து பத்தாவது ஓவர் ஆரம்பமாவதற்கு முன்பு ஆர்சிபி வீரர் சுயாஸ் ஷர்மா பந்தை தொப்பியால் எடுத்து வீசி எறிந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனே போட்டியை நிறுத்திய நடுவர்கள் ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார், சுயாஸ் சர்மா அழைத்து எச்சரிக்கை விடுத்தனர். இது போல் பந்தை தொப்பியால் தொடக்கூடாது என்றும் மீறி செயல்பட்டார்.

ஐந்து ரன்கள் பெனால்டி வழங்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அந்த தவறை சுயாஸ் சர்மா, ஏற்கனவே செய்துவிட்டதால் ஏன் ஐந்து ரன்கள் நடுவர் தரவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. இந்த ஐந்து ரன்கள் மட்டும் பெனால்டி கொடுக்கப்பட்டிருந்தால், அது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் என்றும் ஏன் நடுவர்கள் அதை செய்யவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஐசிசி விதி என்ன சொல்கிறது என்று தற்போது பார்க்கலாம். பந்தை பில்டிங் செய்யும் போது தலையில் இருந்து உடம்பில் எந்த பாகத்தை வைத்து வேண்டுமானாலும் பந்தை தடுக்கலாம். ஆனால் வீரர்கள் தங்களுடைய தொப்பி, டவல் மற்றும் ஹெல்மெட் ஒன்று இவற்றை பயன்படுத்தினால் எதிரணிக்கு ஐந்து ரன்கள் வழங்கப்படும்.

ஆனால் சுயேஸ் சர்மா அந்த தவறை செய்தும் ஏன் நடுவர்கள் 5 ரன் வழங்கவில்லை என்பதற்கும் ஒரு விளக்கம் இருக்கின்றது. சுயேஸ் ஷர்மா அந்த பந்து முடிந்தவுடன் தான் தொப்பியை எடுத்து பந்தை எடுத்தார் என்றும் அந்த பந்துமுடியாமல் இருந்திருந்து அவர் இந்த தவறை செய்திருந்தால் ஐந்து ரன்கள் கிடைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. பால் டெட் ஆன பிறகு நான் அவர் இந்த தவறு செய்தார் என்பதால் நடுவர்கள் வெறும் எச்சரிக்கையுடன் விட்டிருக்கிறார்கள்.

Story first published: Friday, April 25, 2025, 12:36 [IST]
Other articles published on Apr 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+