Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் உடனான போர் தீவிரமடைந்தால், இந்திய ராணுவத்தில் இணைவாரா தோனி?

மும்பை: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் தற்போது ஐபிஎல் தொடரையும் பாதிக்க செய்திருக்கிறது. பார்வையாளர்களின் பாதுகாப்பு காரணமாக ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ ஒத்தி வைத்திருக்கிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் எல்லையோரத்தில் விதிகளுக்கு மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில் போர் தீவிரமடைந்தால் ராணுவத்தில் பொறுப்பு வகிக்கும் தோனியின் செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக இருந்த தோனி இராணுவத்தின் மீதும் பற்று கொண்டிருந்தார்.

MS Dhoni

இதன் காரணமாக ராணுவத்தில் தோனிக்கு கவுரவ Lieutenant colonel பதவி வழங்கப்பட்டது. மேலும் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்துடன் இணைந்து 15 நாள் பயிற்சியும் ஈடுபட்டார். அதில் தோனிக்கு பல்வேறு ராணுவ பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது போர் தீவிரமடைந்தால் தோனி ராணுவத்தில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தோனிக்கு வழங்கப்பட்டு இருக்கும் பதவி கௌரவ பதவி மட்டும் தான். மேலும் தோனி பதிவில் இருப்பவர்கள் நேரடியாக களத்திற்கு சென்று சண்டை போட மாட்டார்கள். பதிலாக ராணுவ வீரர்களுக்கு உதவி செய்யும் பார்ட் டைம் தன்னார்வலர்கள் தான் இந்த பணியில் இருப்பார்கள். தோனி இந்த பொறுப்பை எடுத்துக் கொண்டதற்கு காரணம் மற்ற இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்துவதற்காக தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான போர் தீவிரமடைந்தால் அனைத்து ராணுவ வீரர்களுக்குமான விடுமுறை ரத்து செய்யப்பட்டு எல்லை நோக்கி ராணுவ வீரர்கள் விரைவார்கள். ஆனால் தோனி வெறும் கௌரவ பகுதியில் மட்டும் தான் இருப்பார் என்பதால் அவர் ராணுவத்தில் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக சண்டை போட வேண்டும் என்று கட்டாயம் கிடையாது.

தோனி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார். ஒருமுறை ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களுடைய ஆடைகளை குறிக்கும் ஜெர்சியை இந்திய அணி அணிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 9, 2025, 18:16 [IST]
Other articles published on May 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+