Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL-ஏப்ரல் 5ஆம் தேதி தோனி ஓய்வு முடிவை அறிவிக்க போகிறார்? கிரிக்கெட் விமர்சகர் நாணி சொன்னது உண்மையா

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் பாதியிலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி ஓய்வு பெற போவதாக கிரிக்கெட் விமர்சகர் நாணி அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 43 வயதான தோனி இந்தத் தொடருடன் ஓய்வு பெற போவதாக ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் சிஎஸ்கே அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியை தழுவியது. இதற்கு தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு முன்பே வராததுதான் காரணம் என்று கூறப்பட்டது. தோனி பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி வந்தாலும்,அவர் ஏன் கீழ் வரிசையில் ஒன்பதாவது வீரராக களமிறங்குகிறார் என்று கேள்வி முன் வைக்கப்பட்டது.

இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆன பிளமிங் தோனிக்கு வயதாகி விட்டதால், அவருடைய கால்கள் முன்பு போல் வலுவானதாக இல்லை. தோனியால் தொடர்ந்து பத்து ஓவர் பேட்டிங் செய்ய முடியாது. இதனால்தான் தோனி கடைசி கட்டத்தில் களமிறங்குகிறார் என்று அறிவித்தார்.

இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பலரும் தோனியை கடுமையாக விமர்சித்து வந்தனர். முழு உடல் தகுதி இல்லாமல் ஏன் தோனி ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும். இதற்கு பதில் அவர் லெஜென்ஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடலாமே என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் பல முன்னாள் வீரர்களும் தோனியை கடந்த காலத்தில் சீனியர்களை உடல் தகுதி இல்லை என்று அணியை விட்டு வெளியேற்றிய தோனி மட்டும் தற்போது ஏன் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

தோனியை வெளிப்படையாகவே ஷேவாக் போன்றவர்கள் எல்லாம் கடுமையாக சாடியிருந்தார்கள். இந்த சூழலில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற போவதாக கிரிக்கெட் விமர்சகர் நாணி அறிவித்துள்ளார். இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஐபிஎல் தொடரில் தோனிக்கு வரும் ஏப்ரல் 5-ம் தேதி டெல்லி அணிக்கு எதிரான போட்டி தான் கடைசியாக இருக்கும்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியுடன் தோனி ஓய்வு பெறப் போகிறார் என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு சோகமான செய்தியாக தான் இருக்கும். இதனை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால், இது உண்மை இல்லை என்றும்,அவர் ஏப்ரல் ஃபுல் செய்ய இவ்வாறு செய்தார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, April 2, 2025, 23:23 [IST]
Other articles published on Apr 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+