Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2025 ஐபிஎல் கோப்பை வெல்லப் போகும் அணி இதுதான்.. யுவராஜ் சிங் வெளியிட்ட அதிரடி கணிப்பு

மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் தனக்குப் பிடித்த அணி எது என்றும், ஆனால் எந்த அணி கோப்பை வெல்லப்போகிறது என்பது பற்றியும் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது கருத்தைச் சொல்லியுள்ளார்.

2025 ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் முடிவில், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இதுவரை கோப்பை வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளும், இதுவரை விளையாடிய போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்தில் உள்ளது.

Yuvraj Singh IPL 2025 Punjab Kings Sunrisers Hyderabad Prediction

இந்த ஆறு அணிகளுமே இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளன. இந்த ஆறு அணிகளில் நான்கு அணிகள்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில்தான் யுவராஜ் சிங் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், இந்த ஆண்டு தனக்குப் பிடித்தமான அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆண்டாக இருக்கும், அதாவது பஞ்சாப் அணி கோப்பை வெல்லும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த நிலையிலும் யுவராஜ் சிங் அந்த அணியைத் தனக்குப் பிடித்தமான அணி எனச் சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. யுவராஜ் சிங்கால் பட்டை தீட்டப்பட்ட அபிஷேக் ஷர்மா அந்த அணியில் தான் விளையாடுகிறார். அதற்காகவே தனக்குப் பிடித்தமான அணி என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை யுவராஜ் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே சமயம் அவர் பஞ்சாபைச் சேர்ந்தவர் என்பதால், பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஆண்டு கோப்பை வெல்லும் என்று கூறியுள்ளார். அதே சமயம் இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் யுவராஜ் சிங், அந்த அணி இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வெல்லும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Story first published: Saturday, April 26, 2025, 19:05 [IST]
Other articles published on Apr 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+