Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: 10 அணிகளிடம் கையில் இன்னும் எவ்வளவு பணம் இருக்கு..எத்தனை வீரர்களை தேர்வு செய்யனும்?

மும்பை: ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பு 10 அணிகளும் தாங்கள் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளோம். எந்த வீரர்களை விடுவித்து இருக்கிறோம் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கிறது. எத்தனை வீரர்களை மினி ஏலத்தில் நிரப்ப வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். ஐபிஎல் அணிகளிலே தற்போது அதிகபட்சமாக கொல்கத்தாவிடம் தான் அதிக பணம் இருக்கின்றது.

IPL 2026

கொல்கத்தா 64 கோடியே 30 லட்சம் ரூபாய் கையிருப்பில் வைத்திருக்கிறது. கொல்கத்தா அணி 13 வீரர்களை வாங்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43 கோடியே 40 லட்சம் ரூபாயை கையில் வைத்திருக்கிறது. சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் 9 வீரர்களை வாங்க வேண்டும். மூன்றாவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இருக்கிறது.

ஹைதராபாத் கையில் 25 கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் எஞ்சி இருக்கிறது. அந்த அணி மினி ஏலத்தில் பத்து வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் 22 கோடியே 90 லட்சம் ரூபாய் உடன் லக்னோ அணி இருக்கிறது. லக்னோ அணி மினி ஏலத்தில் ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். டெல்லி அணி கையில் 21 கோடியே 80 லட்சம் ரூபாய் வைத்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணி இன்னும் எட்டு வீரர்களை வாங்க வேண்டும்.

நடப்பு சாம்பியன் ஆன rcb அணியிடம் 16 கோடியே 40 லட்சம் ரூபாய் கையில் இருக்கின்றது. அந்த அணி இன்னும் எட்டு வீரர்களை மினி ஏலத்தில் வாங்க வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கையில் 16 கோடியே 5 லட்சம் ரூபாய் எஞ்சி இருக்கிறது. அந்த அணி இன்னும் மினி ஏலத்தில் 9 வீரர்களை வாங்க வேண்டும்.

குஜராத் அணி கையில் 12 கோடியே 90 லட்சம் இருக்கிறது. அந்த அணி மினி ஏலத்தில் இன்னும் ஐந்து வீரர்களை வாங்க வேண்டும். கடந்த முறை இறுதிப் போட்டி வரை சென்ற பஞ்சாப் அணி கையில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் இருக்கிறது. அந்த அணி இன்னும் நான்கு வீரர்களை வாங்க வேண்டும். ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை அணியிடம் 2 கோடியை 75 லட்சம் ரூபாய் எஞ்சி இருக்கிறது. அவர்கள் மினி ஏலத்தில் இன்னும் ஐந்து வீரர்களை வாங்க வேண்டும்.

Story first published: Saturday, November 15, 2025, 18:55 [IST]
Other articles published on Nov 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+