Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: 2028ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியை நீட்டிக்க முடிவு.. 94 ஆட்டங்களை நடத்த முடிவு

மும்பை: ஐபிஎல் தொடரிலிருந்து அடுத்த ஐசிசி எதிர்கால சுற்றுப்பயணத் திட்டம் அடுத்த சைக்கிளில் அதிக கால அவகாசத்தைக் கோரத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தற்போது 74 ஆக உள்ள போட்டிகளின் எண்ணிக்கையை 94 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 அணிகளுக்கு மேல் விரிவாக்கும் திட்டம் இல்லை என்பதை ஐபிஎல் நிர்வாகம் தெளிவுபடுத்தியது.

போட்டிகளை 94 ஆக உயர்த்த, ஐபிஎல் தொடரில் முழுமையான சொந்த மற்றும் வெளியூர் ஆட்ட முறைக்குத் திரும்ப நிர்வாகம் கருதுகிறது. எனினும், சர்வதேச கிரிக்கெட் காலண்டர் நிரம்பியிருப்பதால், இந்த விரிவாக்கம் கூடுதல் கால அவகாசம் கிடைப்பதன் மூலமே தீர்மாணிக்கப்படும்.

2022 இல் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டதால், ஐபிஎல் எட்டு இல் இருந்து பத்து அணிகளானது. அப்போது ஒவ்வொரு அணியும் மற்ற அனைவருடனும் ஒரு சீசனில் இருமுறை விளையாடவில்லை.

முன்னர் எட்டு அணிகள் இருந்தபோது, ஐபிஎல் இரட்டை ரவுண்ட் ராபின் முறை பின்பற்றப்பட்டது. 10 அணிகளுக்கு இம்முறையைப் பின்பற்றினால், போட்டிகளின் எண்ணிக்கையும் தொடரின் கால அளவும் கணிசமாக அதிகரிக்கும். 2027 வரை FTP திட்டத்தில் கூடுதல் போட்டிகளுக்கான வாய்ப்பு குறைவு.

ஒரு மாற்று யோசனையாக ஒரே நாளில் 2 போட்டிகள் என எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், பார்வையாளர் எண்ணிக்கை மற்றும் விளம்பர வருவாய் குறைந்துவிடும் என்ற கவலைகள் காரணமாக ஒளிபரப்பாளர்களால் அது விரும்பப்படவில்லை.

இது குறித்து பேசிய ஐபிஎல் தலைவர் அருண் தூமல் "தற்போதைய அணிகளின் எண்ணிக்கையுடன், நாங்கள் கூடுதல் போட்டிகளுக்குச் செல்ல முடியும். இப்போதைக்கு அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது அர்த்தமற்றது. ஏனென்றால், சொந்த மண்ணிலும் வெளியிலும் சம எண்ணிக்கையிலான போட்டிகளைப் பெற வேண்டுமானால், 74 இல் இருந்து 94 ஆக அதிகரிக்கலாம். அதுவே சிறந்த சூழ்நிலையாக இருக்கும்," என்று தெரிவித்தார்.

IPL 2026: மாடல் அழகிகளை வைத்து ஹனி டிராபிங்.. பிசிசிஐ கடும் எச்சரிக்கை.. இ- சிகரெட்க்கும் தடை

IPL 2026: மாடல் அழகிகளை வைத்து ஹனி டிராபிங்.. பிசிசிஐ கடும் எச்சரிக்கை.. இ- சிகரெட்க்கும் தடை

"2027 வரையிலான இருதரப்புத் தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளதால், 74 இல் இருந்து 94 போட்டிகளாக எண்ணிக்கையை அதிகரிக்க எங்களுக்குப் பெரிய கால அவகாசம் தேவைப்படும். 2027-க்கு பிந்தைய இருதரப்புத் தொடர் சைக்கிளுக்கு பிறகு ஒரு பெரிய கால அவகாசத்தை நாங்கள் தேடுகிறோம். அது கிடைத்தால், நாங்கள் நிச்சயமாக 94 போட்டிகளை நடத்த முயற்சிப்போம்," என்றார்.ஐபிஎல் தொடரின் 19வது சீசன், மார்ச் 28 அன்று தொடங்கி, மே 31 அன்று நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

Story first published: Friday, May 8, 2026, 11:59 [IST]
Other articles published on May 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+