Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பேட்டிங்கில் 10 மார்க்.. பந்துவீச்சில் வெறும் 1 மார்க்தான்".. சன்ரைசர்ஸ் அணியை வெளுத்த அபினவ்

ஹைதராபாத்: ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன்பே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கட்டமைப்பு குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த அணியின் பேட்டிங் வரிசை மிரட்டலாக இருந்தாலும், பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அபினவ் முகுந்த், இதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வல்லுநராகப் பணியாற்றி வரும் அவர், ஒரு நிகழ்ச்சியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கை 10 புள்ளிகள் கொடுத்துப் பாராட்டினால், அவர்களது பந்துவீச்சுக்கு 1 புள்ளி தான் கொடுக்க முடியும். அந்த அளவிற்கு பந்துவீச்சில் மிகப்பெரிய சரிவு காணப்படுகிறது. அவர்களது பேட்டிங் வரிசை இந்தத் தொடரின் மிகவும் வலிமையான ஒன்றாகும். ஹைதராபாத் போன்ற தட்டையான ஆடுகளங்களில் பேட்டிங் மூலம் அவர்கள் மற்ற அணிகளை நிலைகுலையச் செய்வார்கள். ஆனால் பந்துவீச்சில் அனுபவம் இல்லாதது அவர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்" என்று கூறினார்.

IPL 2026 Abhinav Mukund Critiques SRH Squad 10 for Batting Only 1 for Bowling Ahead of IPL 2026

இந்த சீசனுக்கான ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் கையாண்ட முறையை அவர் விமர்சித்தார். அணியில் ஏற்கனவே டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசன் மற்றும் அபிஷேக் சர்மா போன்ற அதிரடி வீரர்கள் இருக்கும்போது, மீண்டும் லியாம் லிவிங்ஸ்டனை அதிக விலை கொடுத்து வாங்கியது தேவையற்றது என்று அவர் குறிப்பிட்டார். அந்தப் பணத்தைப் பந்துவீச்சை வலுப்படுத்தப் பயன்படுத்தி இருக்கலாம் என்பது அவரது கருத்தாக உள்ளது.

மேலும், சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பல பந்துவீச்சாளர்கள் அவர்களது மாநில முதல்தரப் போட்டிகளிலேயே இடம் பிடிக்கத் தடுமாறுபவர்கள் என்று முகுந்த் சாடியுள்ளார். கடந்த காலங்களில் புவனேஷ்வர் குமார் அல்லது நடராஜன் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அந்த அணிக்கு பலம் சேர்த்தனர். ஆனால் தற்போது ஹர்ஷல் படேல் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஆகிய இருவரை மட்டுமே அந்த அணி நம்பியுள்ளது.

காயம் காரணமாக கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் இஷான் மலிங்கா ஆகியோர் ஆரம்ப கட்டப் போட்டிகளில் விளையாட மாட்டார்கள். இதனால் முதல் சில போட்டிகளில் இஷான் கிஷன் கேப்டனாகவும், அபிஷேக் சர்மா துணை கேப்டனாகவும் அணியை வழிநடத்த உள்ளனர். அனுபவம் குறைந்த பந்துவீச்சுப் படையை வைத்துக்கொண்டு சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Sunday, March 22, 2026, 14:13 [IST]
Other articles published on Mar 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+