Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: அபிஷேக் சர்மா செய்த செயல்.. 3.2 ஓவர்களில் 50 ரன்கள்.. ஐபிஎல் வரலாற்றில் SRH இமாலய சாதனை

ஹைதராபாத்: 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய 49-வது லீக் ஆட்டத்தில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வழக்கம் போல தனது அதிரடி வாணவேடிக்கையைத் தொடங்கி, பஞ்சாப் பந்துவீச்சாளர்களை நிலை குலையச் செய்தார். வெறும் 13 பந்துகளை மட்டுமே சந்தித்த அபிஷேக் சர்மா, 35 ரன்களைக் குவித்து 270 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

அவர் ஆட்டமிழக்கும் போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3.2 ஓவர்களிலேயே 50 ரன்களை எட்டி ஒரு புதிய மைல்கல்லைத் தொட்டது. ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அணி அதிவேகமாக 50 ரன்களை எட்டிய வரிசையில் இது 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்னதாக 2024 ஆம் ஆண்டில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 2.4 ஓவர்களிலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 3.1 ஓவர்களிலும் 50 ரன்களைக் கடந்து சாதனை படைத்திருந்தது. தற்போது பஞ்சாப் அணிக்கு எதிராக 3.2 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி மீண்டும் ஒருமுறை தனது அதிரடி ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது.

IPL 2026 Abhishek Sharma batting helps Sunrisers Hyderabad Register fastest Fifty in IPL 2026

அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பிறகு, மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் தனது பங்கிற்குப் பஞ்சாப் அணியைப் பதம் பார்த்தார். அவர் 19 பந்துகளில் 38 ரன்கள் குவித்து அதிரடியாக வெளியேறினார். அதனைத் தொடர்ந்து வந்த இஷான் கிஷன் நிதானமாகவும் அதேசமயம் அதிக ரன் ரேட்டை உறுதி செய்தார். அவர் 32 பந்துகளில் 55 ரன்களைச் சேர்த்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15 ஓவர்கள் முடிவதற்குள்ளேயே 170 ரன்களைக் கடந்து இமாலய ஸ்கோரை நோக்கிச் சென்றது.

சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிளாசன் தன் பங்கிற்கு நிலைத்து நின்று அதிரடி ஆட்டம் ஆடி ஸ்கோரை மேலும் உயர்த்தினார். பஞ்சாப் கிங்ஸ் அணியும் அதிரடி ஆட்டம் ஆடும் என்பதால் இந்தப் போட்டி சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

Story first published: Wednesday, May 6, 2026, 20:51 [IST]
Other articles published on May 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+