Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"என் வெற்றியை பார்த்து அவங்களுக்கு பொறாமை".. தோற்றுவிட்டு விமர்சகர்களை விளாசிய அஜிங்க்யா ரஹானே

கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டிக்கு பிறகு கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தனது பேட்டிங் மற்றும் ரன் வேகம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு மிகவும் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

ஹைதராபாத் அணி நிர்ணயித்த 227 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய போது, கேப்டன் ரஹானே 10 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் சமூக வலைதளங்களில் அவரது 'ஸ்ட்ரைக் ரேட்' குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஹானே, தன்னை விமர்சிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

IPL 2026 Ajinkya Rahane Hits Back at Critics Over Strike Rate Controversy After KKR s Defeat to SRH

இது குறித்து பேசிய அவர், "2023 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்களில் நானும் ஒருவன். என்னைப் பற்றி பேசுபவர்கள் ஒருவேளை போட்டியை சரியாக பார்ப்பதில்லை என்று நினைக்கிறேன். அல்லது என் மீது அவர்களுக்கு ஏதோ ஒரு தனிப்பட்ட வெறுப்பு இருக்கிறது. நான் விளையாடுவதே அவர்களுக்கு பிடிக்கவில்லை. என்னுடைய வெற்றியைப் பார்த்து அவர்கள் பொறாமைப்படுகிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது" என்று காட்டமாகத் தெரிவித்தார்.

மேலும் தனது ஆட்டம் குறித்து பேசிய அவர், "ஒரே ஒரு போட்டியில் சரியாக விளையாடாததை வைத்து நான் கவலைப்படப் போவதில்லை. பேட்டிங் செய்யும்போது எனது நோக்கம் சரியாகவே இருந்தது. சில நேரங்களில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான நிலை கிடைக்காமல் போகலாம். என்னைப் பற்றி எதிர்மறையாகப் பேசினாலும் அல்லது நேர்மறையாகப் பேசினாலும் எனக்கு மகிழ்ச்சிதான். மக்கள் என்னைப் பற்றி பேசுகிறார்கள் என்பதே பெரிய விஷயம். அவர்கள் பேசட்டும், நான் கவலைப்பட மாட்டேன்" என்று ரஹானே கூறினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு சீசனில் இருந்து ரஹானே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனாலும், தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் அவ்வாறு ஆடுவதில்லை. குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் அவர் சிறப்பாக விளையாடினாலும், அதன் பிறகு அவரது ரன் வேகம் குறைவதாக விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். தற்போது கொல்கத்தா அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த போட்டிகளில் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி உள்ளது.

Story first published: Friday, April 3, 2026, 9:55 [IST]
Other articles published on Apr 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+