Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: இன்னும் ஐபிஎல்-ஏ ஆரம்பிக்கலை.. அதற்குள் 55 பந்தில் 103 ரன் வெளுத்த ரகுவன்ஷி.. KKR சரவெடி

கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடருக்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது வீரர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து பயிற்சி ஆட்டங்களை நடத்தி வருகிறது. இதில் பர்ப்பிள் நைட்ஸ் மற்றும் கோல்டன் நைட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 55 பந்துகளில் சதம் விளாசிய அங்க்ரிஷ் ரகுவன்ஷி பர்ப்பிள் நைட்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.மேலும், அவர் ஐபிஎல் தொடரில் பிளேயிங் 11-இல் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோல்டன் நைட்ஸ் அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது. அந்த அணியின் டிம் சீஃபர்ட் 13 பந்துகளில் 30 ரன்களும், சர்தாக் ரஞ்சன் 16 பந்துகளில் 37 ரன்களும் குவித்து அதிரடி காட்டினர். ஆனால், 10 ஓவர்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது. பின்னர் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரிங்கு சிங் 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. பர்ப்பிள் நைட்ஸ் தரப்பில் வைபவ் அரோரா மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

IPL 2026 Angkrish Raghuvanshi Hits Stunning 55-Ball Century KKR Youngster Shines in IPL 2026 Practice Match

அங்க்ரிஷ் ரகுவன்ஷியின் சதம்

பின்னர் 200 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய பர்ப்பிள் நைட்ஸ் அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் அஜிங்க்யா ரஹானே 2 ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். ஆனால், அதன் பிறகு களத்திற்கு வந்த இளம் வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆட்டத்தின் போக்கையே முழுமையாக மாற்றினார்.

தமது அணியின் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 55 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு ஆதரவாக ஃபின் ஆலன் 23 ரன்களும், அனுகுல் ராய் ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் எடுத்தனர். முடிவில் பர்ப்பிள் நைட்ஸ் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து இலக்கை எளிதாக எட்டி அபார வெற்றி பெற்றது.

ஹர்ஷித் ராணா விலகல்

இதற்கிடையே, ஐபிஎல் 2026 தொடரிலிருந்து கொல்கத்தா அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா விலகியுள்ளார். கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட அவர் விளையாடாதது அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனால் அவருக்குப் பதிலாக புதிய வேகப்பந்து வீச்சாளரைத் தேடும் பணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Story first published: Saturday, March 21, 2026, 9:58 [IST]
Other articles published on Mar 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+