For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2026: சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் Easter Eggs.. தோனி குறித்து மறைமுகமாக சொன்னதை கவனச்சீங்களா?

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசன் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் மறைமுகமான ஒரு விஷயம் ஒளிந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதுமே வயதான வீரர்களை குறி வைத்து ஏலம் எடுக்கும்.

அனுபவம் நிறைந்த வீரர்கள் தான் வெற்றியை தேடி தருவார்கள் என்பது சிஎஸ்கே அணி நம்பும் விஷயமாகும். தற்போது சிஎஸ்கே அணி அதிலிருந்து விலகி இளம் வீரர்களை குறி வைத்து இருக்கிறது. இந்த சூழலில் தோனிக்கு தற்போது 44 வயது ஆவதால், அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

IPL 2026 IPL Auction 2026 CSK MS Dhoni

ஆனால், சிஎஸ்கே அணி அவரையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் இளம் வீரர்கள் கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் ஆகிய வீரர்களுக்கு தலா 14 கோடியே 20 லட்சம் ரூபாயை சிஎஸ்கே அணி வழங்கி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு வீரர்களான அக்கீல் உசேன், மேட் ஹென்றி, சாக் ஃபோல்க்ஸ் உள்ளிட்ட வீரர்களையும் வாங்கி இருக்கிறது.

இதேபோன்று சிஎஸ்கே அணிக்கு சர்பராஸ் தேர்வாகி இருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து ஒரு வீடியோவை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது. அதில் சி எஸ்கே அணியின் வீரர்கள் அனைவரும் ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் வந்து களமிறங்குவது போல் 3டி அனிமேஷன் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது.

இதில் ஒவ்வொரு வீரர்களும் மைதானத்தில் விளையாடுவது போல அந்த வீடியோவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தோனியை அறிமுகப்படுத்தும் போது மட்டும் அவர் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து பேட்டிங் செய்ய களத்திற்கு வருவது போல் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இதில் ஒரு விஷயத்தை சிஎஸ்கே மறைமுகமாக சொல்ல நினைக்கிறது என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். தோனிக்கு தற்போது 44 வயதாகி விட்டதால் அவர் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என்றும் வெறும் பேட்ஸ்மேனாக களத்திற்கு வருவார் என்பது ஏன் சிஎஸ்கே அணி விலகி இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Wednesday, December 17, 2025, 18:30 [IST]
Other articles published on Dec 17, 2025
English summary
IPL 2026 Auction- CSK Released a video With Easter eggs on MS Dhoni
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+