Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction: சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கிய வீரர்கள் பட்டியல்.. 28.4 கோடிக்கு 2 உள்ளூர் வீரர்கள்

அபுதாபி: ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வாங்கிய 9 வீரர்கள் மற்றும் முழுமையான அணி விவரங்களை இங்கே காண்போம். கடந்த 2025 சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து மோசமான சாதனையுடன் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த முறை அணியை முற்றிலுமாக மாற்றியமைக்கத் திட்டமிட்டது. ரூ.43.40 கோடி கையிருப்புடன் ஏலக் களத்தில் இறங்கிய சிஎஸ்கே, தனது பலவீனங்களைச் சரிசெய்யும் முனைப்பில் செயல்பட்டது.

IPL 2026 Auction Full CSK Squad Players bought in IPL auction Purse details

ஏலத்திற்கு முன் நடந்த மெகா ட்விஸ்ட்

ஏலம் தொடங்குவதற்கு முன்பே சிஎஸ்கே ஒரு மிகப்பெரிய 'டிரேட்' (Trade) மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. இதற்காக அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெளிநாட்டு வீரர் சாம் கரண் ஆகியோரை ராஜஸ்தான் அணிக்கு விட்டுக்கொடுத்தது.

மேலும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானாவையும் விடுவித்து, அதன் மூலம் ரூ.13 கோடியை மிச்சப்படுத்தியது. கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடரும் நிலையில், 'தல' எம்.எஸ்.தோனியும் அணியில் இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

சிஎஸ்கே (CSK) அணியின் முழு விவரம்:

2026 ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட புதிய சிஎஸ்கே வீரர்கள்:

அகீல் ஹுசைன் (வெளிநாட்டு வீரர் - வெஸ்ட் இண்டீஸ்) - 2 கோடி

பிரசாந்த் வீர் (உள்ளூர் ஆல் - ரவுண்டர்) - 14.20 கோடி

கார்த்திக் சர்மா (உள்ளூர் விக்கெட் கீப்பர்) - 14.20 கோடி

மேத்யூ ஷார்ட் (வெளிநாட்டு வீரர் - ஆஸ்திரேலியா) - 1.50 கோடி

அமன் கான் (உள்ளூர் ஆல் - ரவுண்டர்) - 40 லட்சம்

சர்ஃபராஸ் கான் (இந்திய பேட்ஸ்மேன்) - 75 லட்சம்

மாட் ஹென்றி (வெளிநாட்டு வீரர் - நியூசிலாந்து) - 2 கோடி

ராகுல் சாஹர் (இந்திய சுழற் பந்துவீச்சாளர்) - 5.20 கோடி

ஜாக் ஃபௌல்க்ஸ் (வெளிநாட்டு வீரர்- நியூசிலாந்து) - 75 லட்சம்

தக்கவைக்கப்பட்ட மற்றும் டிரேட் செய்யப்பட்ட வீரர்கள்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்)
எம்.எஸ். தோனி
சஞ்சு சாம்சன் (டிரேட் மூலம் வந்தவர்)
ஷிவம் துபே
நூர் அஹமது
கலீல் அஹமது
நாதன் எலிஸ்
ஸ்ரேயாஸ் கோபால்
முகேஷ் சவுத்ரி
ஆயுஷ் மத்ரே
டெவால்ட் பிரேவிஸ்
உர்வில் படேல்
ஜேமி ஓவர்டன்
ராமகிருஷ்ணா கோஷ்
அன்ஷுல் கம்போஜ்
குர்ஜப்னீத் சிங்

அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட முக்கிய வீரர்கள்:

ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், மதீஷா பதிரானா, டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், ஆண்ட்ரே சித்தார்த், கமலேஷ் நாகர்கோட்டி, வன்ஷ் பேடி.

Story first published: Tuesday, December 16, 2025, 15:03 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+