Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026:கோப்பையை வெல்லும் சுப்மன் கில் கனவு நிறைவேறுமா? ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் வாங்கிய வீரர்கள்

அகமதாபாத்: முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பாக தங்கள் முக்கிய வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டது. அகமதாபாத்தைச் சேர்ந்த இந்த அணி, ஏலத்தில் சில முக்கிய மாற்று வீரர்களையும் சேர்த்துள்ளது.

சுப்மன் கில், முகமது சிராஜ், ககிசோ ரபாடா, ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற நட்சத்திர வீரர்கள் ஏற்கனவே அணியில் இருப்பதால், ஐபிஎல் 2026 கோப்பையை வெல்வதற்கான வலுவான அணியாக குஜராத் டைட்டன்ஸ் திகழ்கிறது.

Gujarat Titans

இந்த ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கிய மிகப் பெரிய நட்சத்திர வீரர் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஆவார். அதிரடி ஆட்டக்காரரான இந்த ஆல்-ரவுண்டரை ₹7 கோடிக்கு வாங்கியது. சையத் முஷ்டாக் அலி கோப்பையில் சிறப்பாகப் பந்துவீசிய அன்கேப்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஷோக் ஷர்மாவையும் குஜராத் டைட்டன்ஸ் அணி கைப்பற்றியுள்ளது.

₹30 லட்சம் அடிப்படை விலையுடன் ஏலத்தில் நுழைந்த ஷர்மாவை, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுடன் போட்டி போட்டு ₹90 லட்சத்திற்கு டைட்டன்ஸ் அணி வாங்கியது. இந்த நிலையில், ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களும், அவர்களின் ஊதியத்தையும் தற்போது பார்க்கலாம்.

சுப்மன் கில் - ₹16.5 கோடி, சாய் சுதர்சன் - ₹8.5 கோடி, அனுஜ் ராவத் - ₹30 லட்சம், குமார் குஷாக்ரா - ₹65 லட்சம், ஜோஸ் பட்லர் - ₹15.75 கோடி, ராகுல் டெவாடியா - ₹4 கோடி, ஜெயந்த் யாதவ் - ₹75 லட்சம்.

ஷாரூக்கான் - ₹4 கோடி, நிஷாந்த் சிந்து - ₹30 லட்சம், க்ளென் பிலிப்ஸ் - ₹2 கோடி, வாஷிங்டன் சுந்தர் - ₹3.2 கோடி, ரஷீத் கான் - ₹18 கோடி, மனவ் சூதர் - ₹30 லட்சம், இஷாந்த் சர்மா - ₹75 லட்சம், ஆர் சாய் கிஷோர் - ₹2 கோடி.

முகமது சிராஜ் - ₹12.25 கோடி, பிரசித் கிருஷ்ணா - ₹9.5 கோடி, ககிசோ ரபாடா - ₹10.75 கோடி, குர்னூர் ப்ரார் - ₹1.3 கோடி, அர்ஷத் கான் - ₹1.3 கோடி,

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்: அஷோக் சர்மா - ₹90 லட்சம், ஜேசன் ஹோல்டர் - ₹7 கோடி, லூக் வூட் - ₹75 லட்சம், பிரித்வி ராஜ் யார்ரா - ₹30 லட்சம், டாம் பான்டன் - ₹2 கோடி.

Story first published: Wednesday, December 17, 2025, 0:10 [IST]
Other articles published on Dec 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+