Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கிய வீரர்கள் பட்டியல்.. கிரீன், பதிரானாவை தூக்கிய KKR

அபுதாபி: ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி வாங்கிய வீரர்கள் மற்றும் முழுமையான அணி விவரங்களை இங்கே காண்போம்.

மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கடந்த சீசனில் மோசமான தோல்விகளைச் சந்தித்த நிலையில், இம்முறை அணியை வலுப்படுத்தக் கஜானாவைத் திறந்துவிட்டுள்ளது. இந்த ஏலத்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரான் கிரீனை ரூ.25.20 கோடிக்கு வாங்கி சாதனை படைத்துள்ளது.

IPL 2026 Auction KKR bought players list in IPL Auction 2026 Buys Cameron Green Matheesha Pathirana

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை கிரீன் பெற்றுள்ளார். ஆண்ட்ரே ரஸ்ஸல் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்தை நிரப்ப கிரீன் சரியான தேர்வாக இருப்பார் என நிர்வாகம் கருதுகிறது.

பதிரானாவுக்கு 18 கோடி!

கிரீனைத் தவிர்த்து, பந்துவீச்சிலும் கேகேஆர் அதிரடி காட்டியுள்ளது. சிஎஸ்கே அணியால் விடுவிக்கப்பட்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானாவை ரூ.18 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. மேலும், நியூசிலாந்து அதிரடித் தொடக்க வீரர் ஃபின் ஆலனை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்குத் தட்டித் தூக்கியது அந்த அணிக்குக் கிடைத்த லாபகரமான ஒப்பந்தமாகும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் முழு விவரம்:

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்:

1. கேமரூன் கிரீன் (ரூ. 25.20 கோடி)

2. ஃபின் ஆலன் (ரூ. 2 கோடி)

3. மதீஷ பத்திரன (ரூ. 18 கோடி)

4. தேஜஸ்வி சிங் (ரூ. 3 கோடி)

5. கார்த்திக் தியாகி (ரூ. 30 லட்சம்)

6. பிரசாந்த் சோலங்கி (ரூ 30 லட்சம்)

7. ராகுல் திரிபாதி (ரூ. 75 லட்சம்)

8. டிம் சீஃபர்ட் (ரூ. 1.5 கோடி)

9. முஸ்தாபிசுர் ரஹ்மான் (ரூ. 9.2 கோடி)

10. சர்தக் ரஞ்சன் (ரூ 30 லட்சம்)

11. தக்ஷ் கம்ரா (ரூ. 30 லட்சம்)

12. ரச்சின் ரவீந்திரா (ரூ. 2 கோடி)

13. ஆகாஷ் தீப் (ரூ. 1 கோடி)

தக்கவைக்கப்பட்ட மற்றும் தற்போதைய வீரர்கள்:

ரிங்கு சிங்
சுனில் நரைன்
வருண் சக்கரவர்த்தி
ஹர்ஷித் ராணா
அஜிங்க்யா ரஹானே
அங்க்ரிஷ் ரகுவன்ஷி
அனுகுல் ராய்
மனீஷ் பாண்டே
ரமன்தீப் சிங்
ரோவ்மன் பாவல்
உம்ரான் மாலிக்
வைபவ் அரோரா

அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட முக்கிய வீரர்கள்:

வெங்கடேஷ் ஐயர், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், மொயீன் அலி, ஸ்பென்சர் ஜான்சன், ஆன்ரிச் நோர்ட்ஜே, சேத்தன் சக்காரியா, லவ்னித் சிசோடியா. ஆண்ட்ரே ரஸ்ஸல் (ஓய்வு பெற்றார்).

சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி ஆகியோருடன் தற்போது மதீஷா பதிரானா மற்றும் ஹர்ஷித் ராணா இணைந்திருப்பது கேகேஆர் பந்துவீச்சை அசுர பலமாக்கியுள்ளது. பேட்டிங்கில் கிரீன் மற்றும் ரிங்கு சிங் கூட்டணி 2026 சீசனில் எதிரணிகளுக்குச் சிம்மசொப்பனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, December 16, 2025, 16:34 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+