For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2026: பிளேயிங் லெவனிலே இல்லாத ஒரு வீரருக்கு ஏன் ரூ.14.2 கோடி? சிஎஸ்கேக்கு ஸ்ரீகாந்த் கேள்வி

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டாலும், ஒரே ஒரு விஷயத்தில் குறை வைத்து விட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 43 கோடியே 40 லட்சம் ரூபாய் உடன் சிஎஸ்கே அணி ஏலத்தில் சென்று 9 வீரர்களை வாங்கியிருக்கிறது.

இதில் அதிகபட்சமாக இளம் வீரர்கள் பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோருக்கு தலா 14 கோடியே 20 லட்சம் ரூபாயை சிஎஸ்கே அணி வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு 9 கோடி ரூபாய் வரை சிஎஸ்கே அணி ஏலம் கேட்ட நிலையில் விலகியது.

IPL 2026 IPL Auction 2026 CSK Kris srikanth

இதன் மூலம் 9 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு முஸ்தஃபீஸூர் ரஹ்மானை கே கே ஆர் அணி வாங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், சிஎஸ்கே அணி முஸ்தஃபிசுர் ரஹ்மானை வாங்காமல் போனது தவறுதான். அணியிலிருந்து பதிரனாவை நீக்கிய உடனே அவர்கள் முஸ்தஃபீசூரை தேர்வு செய்து இருக்க வேண்டும். அல்லது 15 கோடி ரூபாய் இருந்தாலும் அவரை கண்டிப்பாக தேர்வு செய்து இருக்க வேண்டும்.

கடைசி கட்டத்தில் பௌலிங்கில் இதுபோல் செயல்பட சிஎஸ்கே அணிக்கு தற்போது எந்த ஒரு வீரரும் இல்லை. தற்போது கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் ஆகியோரை சிஎஸ்கே அணி அதிக பணம் கொடுத்து வாங்கி இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு பேர்களில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைத்திருக்கும். இதேபோன்று அகில் உசேனும் பிளேயிங் லெவனில் விளையாட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

ஜடேஜா போல் நன்றாக பந்து வீசக்கூடியவர். பவர் பிளேவிலும் அவரால் பந்து வீச முடியும். நாம் நூர் அகமதை மட்டும் நம்பி இருக்க முடியாது. எனவே ஹக்கீல் உசேன் தேவை. இதேபோல் பிரசாந்த் வீர் எவ்வாறு பந்து வீசுவார் என்று நமக்கு இன்னும் தெரியாது. சிஎஸ்கே அணி தற்போது இளைஞர்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ராகுல் சாஹரும் ஒரு நல்ல தேர்வு தான். தனது திறமையை ஏற்கனவே அவர் நிரூபித்து இருக்கின்றார். ஐபிஎல் தொடரிலும் நன்றாக செயல்பட்டு இருக்கிறார். சிலர் அவருக்கு நடத்தையில் சில தவறு செய்வதாக கூறுகிறார்கள்.

ஆனால் அதைப் பற்றி எனக்கு தெரியவில்லை. அவர் ஒன்றும் மோசமான பவுலர் கிடையாது. அதுவும் சென்னை போன்ற ஆடுகளங்களில் அவர் சிறப்பாக செயல்படுவார். ஒருமுறை சிஎஸ்கே எதிராக பஞ்சாப் அணி போட்டியில் வெல்ல ராகுல் சாகர் முக்கியமான காரணமாக இருந்தார். ராகுல் சாகரும் நூர் அகமதும் நல்ல முறையில் பந்து வீசினால் நிச்சயம் எதிரணி சிரமப்படும்.

நான் மூன்று முன்று ஸ்பின்னர்களுடன் சென்னையில் விளையாடும் போது களம் இறங்குவேன். ராகுல் சாகர், அகில் உசேன் ஆகியோரை பயன்படுத்துவேன். இதன் மூலம் அன்சூல் காம்போஜை பிளேயிங் லெவனில் சேர்க்க மாட்டேன். இதனால் நீங்கள் சிவம் துபேவை மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்தலாம் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, December 17, 2025, 15:58 [IST]
Other articles published on Dec 17, 2025
English summary
IPL 2026 Auction- Kris srikanth speaks about csk Performance during action
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+