Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction; பஞ்சாப் கிங்ஸ் அணியின் முழு லிஸ்ட்.. குறைந்த பட்ஜெட் தேர்வு.. ஸ்ரேயாஸ் ஐயர் படை தயார்

அபுதாபி: ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடந்து முடிந்துள்ளது. இந்த ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி வாங்கிய வீரர்கள் மற்றும் முழுமையான அணி விவரங்களை இங்கே காண்போம்.

கடந்த 2025 சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் நூலிழையில் தோற்று இரண்டாம் இடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், இந்த மினி ஏலத்தில் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்டது. ஏலத்தின் தொடக்கத்தில் வெறும் ரூ.11.50 கோடி என்ற குறைந்த கையிருப்புத் தொகையுடன் களமிறங்கியதால், நீண்ட நேரம் பஞ்சாப் அணி அமைதி காத்தது.

IPL 2026 Auction Punjab Kings Full Squad Shreyas Iyer s Team Ready with Economical Buys

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு முக்கியத்துவம்

ஏலத்தின் பிற்பகுதியில் துரிதப்படுத்தப்பட்ட சுற்றில் ஆஸ்திரேலியாவின் இளம் ஆல்-ரவுண்டர் கூப்பர் கானலியை வாங்க பஞ்சாப் ஆர்வம் காட்டியது. இடதுகை பேட்ஸ்மேனும், சுழற்பந்து வீச்சாளருமான இவரை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியிட்டாலும், இறுதியில் ரூ.3 கோடிக்கு பஞ்சாப் தட்டித் தூக்கியது.

மேலும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பென் துவார்ஷுயிஸை ரூ.4.40 கோடிக்கு வாங்கியது அந்த அணியின் மற்றொரு முக்கிய நடவடிக்கையாகும். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கடந்த சீசனில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிளே-ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிக்குச் சென்று அசத்திய பஞ்சாப், இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் போன்ற பெரிய பெயர்களை விடுவித்துவிட்டு, தங்கள் அணியின் முக்கியப் பலமான வீரர்களைத் தக்கவைத்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியின் முழு விவரம்:

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் :

கூப்பர் கானலி - ₹3 கோடி
பென் துவார்ஷுயிஸ் - ₹4.40 கோடி
பிரவீன் துபே - ₹30 லட்சம்
விஷால் நிஷாத் - ₹30 லட்சம்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் :

பிரப்சிம்ரன் சிங்
பிரியான்ஷ் ஆர்யா
ஸ்ரேயாஸ் ஐயர் - கேப்டன்
ஷஷாங்க் சிங்
நேஹால் வதேரா
மார்கஸ் ஸ்டோய்னிஸ்
அஸ்மத்துல்லா ஒமர்சாய்
மார்கோ யான்சன்
ஹர்பிரீத் பிரார்
யுஸ்வேந்திர சாஹல்
அர்ஷ்தீப் சிங்
முஷீர் கான்
பைலா அவினாஷ்
ஹர்னூர் பன்னு
சூர்யான்ஷ் ஷெட்ஜ்
மிட்செல் ஓவன்
சேவியர் பார்ட்லெட்
லாக்கி பெர்குசன்
விஷாக் விஜய்குமார்
யஷ் தாக்கூர்
விஷ்ணு வினோத்

அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, குல்தீப் சென் , பிரவீன் துபே - மீண்டும் ஏலத்தில் எடுக்கப்பட்டார்).

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் வலுவான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ள பஞ்சாப் கிங்ஸ், 2026 ஐபிஎல் தொடரில் தனது முதல் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகிறது.

Story first published: Tuesday, December 16, 2025, 23:40 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+