அபுதாபி: ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி வாங்கிய வீரர்கள் மற்றும் முழுமையான அணி விவரங்களை இங்கே காண்போம்.
முதல் சீசன் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ், இந்த மினி ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாயை வாங்குவதில் மிகத் தீவிரமாக இருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இவரை வாங்கக் கடும் போட்டி போட்டன. இறுதியில் ரூ.7 கோடிக்கு மேல் ஏலம் சென்றபோது மற்ற அணிகள் பின்வாங்க, ரூ.7.20 கோடிக்கு ரவி பிஷ்னாயை ராஜஸ்தான் ராயல்ஸ் தட்டித் தூக்கியது.

ஏலத்திற்கு முன்பே ராஜஸ்தான் அணி ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் செய்திருந்தது. தனது நீண்ட கால கேப்டனான சஞ்சு சாம்சனை சிஎஸ்கேவுக்கு கொடுத்துவிட்டு, அங்கிருந்து அனுபவ வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை டிரேட் செய்தது. அனுபவமும், இளமையும் கலந்த கலவையாக அணியை உருவாக்கத் திட்டமிட்டுள்ள ராஜஸ்தான் நிர்வாகம், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் மற்றும் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரைத் தக்கவைத்துள்ளது.
இந்த ஏலத்தில் ரவி பிஷ்னாய் தவிர, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவை ரூ.2.4 கோடிக்கும், சுஷாந்த் மிஸ்ரா போன்ற இளம் வீரர்களையும் ராஜஸ்தான் வாங்கியுள்ளது.
ரவி பிஷ்னாய் - ₹7.20 கோடி
ஆடம் மில்னே - ₹2.4 கோடி
ரவி சிங் - ₹95 லட்சம்
சுஷாந்த் மிஸ்ரா - ₹90 லட்சம்
குல்தீப் சென் - ₹75 லட்சம்
யஷ் ராஜ் புஞ்சா - ₹30 லட்சம்
விக்னேஷ் புத்தூர் - ₹30 லட்சம்
அமன் ராவ் - ₹30 லட்சம்
பிரிஜேஷ் சர்மா - ₹30 லட்சம்
ரவீந்திர ஜடேஜா (டிரேட் மூலம் வந்தவர்)
சாம் கரண் (டிரேட் மூலம் வந்தவர்)
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
வைபவ் சூர்யவன்ஷி
ரியான் பராக்
துருவ் ஜூரல்
ஜோஃப்ரா ஆர்ச்சர்
நாண்ட்ரே பர்கர்
துஷார் தேஷ்பாண்டே
குவேனா மாபகா
ஷுபம் துபே
ஷிம்ரான் ஹெட்மையர்
லுவான்-ட்ரே-பிரிட்டோரியஸ்
டோனோவன் ஃபெரீரா
சந்தீப் சர்மா
யுத்விர் சரக்
மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா, பசல்ஹக் ஃபரூக்கி, குனால் ரத்தோர், அசோக் சர்மா, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால். சஞ்சு சாம்சன் - சிஎஸ்கேவுக்கு டிரேட் செய்யப்பட்டார்.