For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL ஏலத்தில் ஆர்சிபி அணி வாங்கிய வீரர்களின் முழு லிஸ்ட்.. 7 கோடிக்கு வெங்கடேஷ் ஐயர்.. சாம்பியன் படை

அபுதாபி: ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி வாங்கிய வீரர்கள் மற்றும் முழுமையான அணி விவரங்களை இங்கே காண்போம். கடந்த 2025 சீசனில் அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி, தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று வரலாறு படைத்தது ஆர்சிபி.

நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்த மினி ஏலத்தில் களமிறங்கிய பெங்களூரு நிர்வாகம், அணியின் ஆல்-ரவுண்டர் வரிசையை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இந்த ஏலத்தில் ஆர்சிபி அணியின் முக்கிய வரவாக இந்திய ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் இணைந்துள்ளார். அவரை வாங்குவதற்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதலில் ஆர்வம் காட்டின.

IPL 2026 Auction RCB bought players and Full Squad Revealed Venkatesh Iyer Joins Champions for 7 Cr

பின்னர் களத்தில் குதித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), தங்களது முன்னாள் வீரரை மீட்கப் போராடியது. ரூ.6.80 கோடி வரை கேகேஆர் சென்ற நிலையில், இறுதியில் ரூ.7 கோடிக்கு வெங்கடேஷ் ஐயரை ஆர்சிபி தட்டித் தூக்கியது.

இதன் மூலம் மத்திய பிரதேச அணியில் ஒன்றாக விளையாடும் ரஜத் படிதார் (ஆர்சிபி கேப்டன்) மற்றும் வெங்கடேஷ் ஐயர் கூட்டணி ஐபிஎல்-லிலும் இணைகிறது. மேலும், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபியை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஆர்சிபி வாங்கியுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் முழு விவரம்:

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்:

1. வெங்கடேஷ் ஐயர் (ரூ. 7 கோடி)

2. ஜேக்கப் டஃபி (ரூ. 2 கோடி)

3. சாத்விக் தேஸ்வால் (ரூ. 30 லட்சம்)

4. மங்கேஷ் யாதவ் (ரூ 5.2 கோடி)

5. ஜோர்டான் காக்ஸ் (ரூ. 75 லட்சம்)

6. விக்கி ஓஸ்ட்வால் (ரூ. 30 லட்சம்)

7. விஹான் மல்ஹோத்ரா (ரூ 30 லட்சம்)

8. கனிஷ்க் சவுகான் (ரூ 30 லட்சம்)

தக்கவைக்கப்பட்ட மற்றும் தற்போதைய வீரர்கள்:

ரஜத் படிதார் (கேப்டன்)
விராட் கோலி
தேவ்தத் படிக்கல்
பில் சால்ட்
ஜித்தேஷ் சர்மா
க்ருணால் பாண்டியா
ஸ்வப்னில் சிங்
டிம் டேவிட்
ரொமாரியோ ஷெப்பர்ட்
ஜேக்கப் பெத்தல்
ஜோஷ் ஹேசில்வுட்
யஷ் தயாள்
புவனேஷ்வர் குமார்
நுவான் துஷாரா
ரஷிக் சலாம்
அபிநந்தன் சிங்
சுயாஷ் சர்மா

அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட முக்கிய வீரர்கள்:

லியம் லிவிங்ஸ்டோன், மயங்க் அகர்வால், லுங்கி இங்கிடி, ஸ்வஸ்திக் சிகாரா, மனோஜ் பண்டேஜ், மோகித் ரதி.

விராட் கோலி, ரஜத் படிதார், டிம் டேவிட் ஆகியோருடன் தற்போது வெங்கடேஷ் ஐயரும் இணைந்திருப்பது ஆர்சிபி பேட்டிங்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது. பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட் என அனுபவ கூட்டணியுடன் ஆர்சிபி 2026 சீசனையும் கலக்கத் தயாராக உள்ளது.

Story first published: Tuesday, December 16, 2025, 17:24 [IST]
Other articles published on Dec 16, 2025
English summary
IPL 2026 Auction: RCB bought players and Full Squad Revealed; Venkatesh Iyer Joins Champions for ₹7 Cr
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+