Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction: ஏலத்தில் மற்ற அணிகளை கதறவிட்ட காவ்யா மாறன்.. சன்ரைசர்ஸ் வாங்கிய வீரர்கள்

அபுதாபி: அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2026 மெகா ஏலத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பத்து புதிய வீரர்களை வாங்கியுள்ளது. ₹25.5 கோடி பட்ஜெட்டுடன் களமிறங்கிய SRH, முதலில் அனுபவமில்லாத ஷிவாங் குமாரை அடிப்படை விலையில் வாங்கியது. ஆரம்பச் சுற்றுகளில் சில முன்னணி வீரர்களுக்கு ஏலம் கோரிய SRH, பட்ஜெட் காரணமாக அவற்றை ஈர்க்கவில்லை.

ஏலத்தில் சில சமயங்களில் காவ்யா மாறன் அழகாக காய் நகர்த்தி மற்ற அணி வாங்க இருந்த வீரர்களை ஏற்றி விட்டார். பின்னர் சன்ரைசர்ஸ் தீவிரமாகச் செயல்பட்டு, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நடந்த கடும் போட்டிக்குப் பிறகு, அனுபவமில்லாத சலீல் அரோராவை வாங்கியது.

IPL SRH

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை ₹13 கோடிக்கு இரண்டாம் சுற்றில் SRH ஏலத்தில் எடுத்தது. இவரை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் கடுமையாகப் போட்டியிட்டன.

SRH அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவியையும் அடிப்படை விலைக்கு வாங்கியது. கவியா மாறன் , சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ்ஆகியவற்றுடன் போட்டி போட்டு, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸை ₹3 கோடிக்கு வாங்கினார். இவர்களுடன் ஓம்கார் தர்மலே, அமித் குமார், சகிப் ஹுசைன், பிரபுல் ஹிங்கே மற்றும் கிரெய்ன்ஸ் ஃபுலெட்ரா போன்ற மேலும் பல இளம் வீரர்களும் அணியில் இணைந்தனர்.

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் (முழு விவரம்): ₹30 லட்சத்திற்கு ஷிவாங் குமார், சகிப் ஹுசைன், ஓம்கார் தர்மலே, அமித் குமார், பிரஃபுல் ஹிங்கே, கிரயின்ஸ் ஃபுலெட்ரா ஆகியோர் வாங்கப்பட்டனர். மற்றவர்கள்: சலில் அரோரா ₹1.5 கோடி, ஷிவம் மாவி ₹75 லட்சம், லிவிங்ஸ்டன் ₹13 கோடி, ஜாக் எட்வர்ட்ஸ் ₹3 கோடி.

தக்கவைக்கப்பட்ட மற்றும் தற்போதைய வீரர்கள்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, அனிகேட் வர்மா, ஆர். ஸ்மரன், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷ் தூபே, கமிந்து மெண்டிஸ், ஹர்ஷல் படேல், பிரைடன் கார்ஸ், ஜெய்தேவ் உனட்கட், இஷான் மாலிங்கா, ஜீஷான் அன்சாரி.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஆடம் ஜாம்பா, ராகுல் சாஹர், வியான் மல்டர், அபினவ் மனோகர், அதர்வா டைட், சச்சின் பேபி, சிமர்ஜீத் சிங்.

Story first published: Tuesday, December 16, 2025, 23:10 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+