Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஆயுஷ் மாத்ரே-வை பேட்டிங் செய்ய விடாமல் தடுத்த நடுவர்.. களத்தில் ஏற்பட்ட பரபரப்பு.. நடந்தது என்ன?

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே பேட்டிங் செய்ய வந்தபோது நடுவர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி இன்று தங்களுடைய இரண்டாவது லீக் ஆட்டத்தில் களமிறங்கியது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த சீசனில் முதல் ஆட்டம் நடந்தது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசியது. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 7 ரன்களில் ஆட்டம் இழக்க, சிஎஸ்கே அணி 14 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

அப்போது பேட்டிங் செய்ய ஆயுஷ் மாத்ரே களத்திற்குள் வந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய நடுவர், ஆயுஷ் மாத்ரே பேட் கொஞ்சம் தடிமனாக இருந்ததால் அதனை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். இதனை அடுத்து நடுவர் வைத்திருந்த கருவி மூலம் அவர் பேட்டை அளந்தார். அந்த கருவிக்குள் பேட் உள்ளே நுழைந்து சென்றால், விதிகளுக்கு உட்பட்ட வகையில் பேட் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக அர்த்தம்.

ஆனால் அந்த கருவிக்குள் பேட் செல்லாமல் பாதையில் நின்றால் பேட் விதிகளுக்கு மீறி தடிமனாக இருப்பதாக அர்த்தம். இதை அடுத்து ஆயுஷ் மாத்ரே பேட் விதிகளுக்கு உட்பட்டு இல்லை எனக் கூறி நடுவர் அவரை பேட்டிங் செய்ய விடாமல் தடுத்தார். இதனை அடுத்து சிஎஸ்கே அணி வீரர்கள் ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று பேட்டை எடுத்து வந்து கொடுத்தனர்.

அப்போது மாற்று பேட்டும் அந்த கருவிக்குள் செல்லாமல் இருந்தது. இதனை அடுத்து மீண்டும் நடுவர் ஆயுஷ் மாத்ரே பேட்டை மாற்ற சொல்லி கேட்டார். அதற்கு ஆயுஷ் மாத்ரே ஒப்புக்கொள்ளாமல் கருவியில் தான் ஏதோ பிரச்சனை, வேறு மாதிரி அளவிடுங்கள் என்று கூறினார். அதற்கு ஒப்புக் கொள்ளாத நடுவர் வேறு பேட் இருந்தால் மட்டுமே உங்களை நான் பேட்டிங் செய்ய அனுமதிப்பேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதை அடுத்து மூன்றாவது முறையாக ஒரு பேட் தேர்வு செய்யப்பட்டு அதனை நடுவர் பரிசோதனை செய்தார். அதில் பேட் விதிகளுக்கு உட்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் பிறகு பேட்டிங் செய்ய ஆயுஷ் மாத்ரே அனுமதிக்கப்பட்டார். நடுவரின் இந்த பரிசோதனையால் ஆயுஸ் மாத்ரே கொஞ்சம் டென்ஷன் ஆனார். இதனால் பேட்டிங்கில் பவுண்டரி, சிக்சர் என பொளந்து 29 பந்துகளில் அவர் அரை சதம் அடித்தார்.

Story first published: Friday, April 3, 2026, 21:11 [IST]
Other articles published on Apr 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+