IPL 2026: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிசிடிவி கேமிராக்கள் உடைப்பு.. 2 பேர் கைது
பெங்களூரு: 2026 ஐபிஎல் தொடரில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உண்டாகியுள்ளது. . ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போட்டிக்கு முன்னதாக, சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கேமிராவுக்கு பணம் தரப்படவில்லை என்பதால், இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் (NVR), ஃபைபர் ஆப்டிக் இணைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் 240க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன. இது மைதானப் பாதுகாப்பில் பெரிய பாதிப்பை உருவாக்கி, பல பகுதிகளை கண்காணிப்பு மேற்கொள்ளப்படவில்லை.

ஐவிஎஸ் டிஜிட்டல் சொல்யூஷன்ஸ் துணை ஒப்பந்தக்காரர் கீழ் பணிபுரிந்த மஞ்சுநாத் மற்றும் அப்துல் கலாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்டாகு டெக்னாலஜிஸ் ஊழியரின் புகாரின்படி, செயலிழந்த அட்மிட் கார்டு பயன்படுத்தி சிசிடிவி கட்டுப்பாட்டு அறைக்குள் அத்துமீறி நுழைந்து உபகரணங்களை சேதப்படுத்தியுள்ளனர்.
சுமார் 10 லட்சம் ரூபாய் நிலுவைத்தொகை வழங்காததே இச்செயலுக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணை தெரிவிக்கிறது. மைதானத்தின் நுழைவு வாயில்கள், நடைகள், கார்ப்பரேட் ஸ்டாண்டுகள் போன்ற முக்கியப் பகுதிகள் சில காலம் நேரடி கண்காணிப்பு இல்லாமல் இருந்தன. சிசிடிவி பதிவுகளில் சந்தேக நபர்களின் அத்துமீறிய செயல் பதிவாகியிருந்தது.
இந்த மீறலுக்குப் பிறகும், அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, மாற்று அமைப்புகள் மூலம் கண்காணிப்பை மீட்டெடுத்தனர். இதனால் போட்டி எந்த இடையூறுமின்றி சுமூகமாக நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சேதத்தின் முழு அளவையும் தீர்மானிக்க விசாரணைகள் நடந்து வருகின்றன.
இச்சம்பவம், ஐபிஎல்-ன் முக்கிய மைதானமான சின்னசுவாமியின் பாதுகாப்பு தயார்நிலை குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், நடப்பாண்டில் , டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து இந்த விசயமும் அரங்கேறியுள்ளது.
போட்டியைப் பொறுத்தவரை, ஆர்சிபி அணி ஜிடி-யை வென்றது. பெங்களூரு அணி தனது ஐபிஎல் சொந்த மைதானப் போட்டிகளை நிறைவு செய்தது. ஐந்து ஆட்டங்களில் நான்கு வெற்றிகளைப் பதிவு செய்தது. தனது மீதமுள்ள போட்டிகளை ராய்ப்பூருக்கு மாற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications

